2031-இல் முதல்வர் திருமாவளவனா?; ''TN 07 CM 2031'' பதிவெண் கார் சர்ச்சை குறித்து விசிக விளக்கம்..! - Seithipunal
Seithipunal


பூவிருந்தவல்லி அருகே செம்பரம்பாக்கத்தில் உள்ள ஈவிபி (EVP) பிலிம் சிட்டியில் நடைபெற்ற தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக திருமாவளவன் ''TN 07 CM 2031'' என்ற பதிவெண் கொண்ட ஒரு காரில் வருகை தந்தார். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

முன்னதாக, முதலமைச்சர் விஜய் நடித்து கடந்த 2024-ஆம் ஆண்டு வெளியான "GOAT" திரைப்படத்தில் பயன்படுத்திய ''TN 07 CM 2026'' பதிவெண் கொண்ட கார் பாணியில், எதிர்காலத்தை கணிக்கும் வகையில், ''TN 07 CM 2031'' என்ற பதிவெண் படுத்தப்பட்டிருந்தது.

திருமாவளவன் வந்த காரின் புகைப்படங்களும், வீடியோக்களும் தற்போது இணையத்தில் வேகமாகப் பரவி வருவதுடன், அரசியல் வட்டாரத்திலும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளன.

எம் பரிவாகன் என்ற செயலியின் மூலம், அவர் பயணித்த காரின் பதிவெண் 2018-ஆம் ஆண்டி பதிவுசெய்யப்பட்ட இருசக்கர வாகனத்தின் பதிவெண் என்பதை கண்டறிந்த நெட்டிசன்கள், போலி பதிவெண் கொண்ட காரில் விசிக தலைவர் திருமாவளவன் பயணித்துள்ளதாக கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், விசிக மாநிலப் பொருளாளர் எஸ்.எஸ். பாலாஜி,  இந்த விவகாரம் குறித்து விளக்கமளித்துள்ளார். அதன்படி, ''திருமா 35 ஆண்டுகள்''என்ற நிகழ்ச்சியை EVP பிலிம் சிட்டியில் தனியார் ஊடக குழு ஒன்று ஒருங்கிணைத்தது. நிகழ்ச்சியின் அனைத்து ஏற்பாடுகளும், விருது வழங்குவது என்ற அனைத்து பொறுப்புகளும் அவர்கள் தான் ஏற்றுக் கொண்டனர் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், அந்த நிகழ்ச்சி ஒருங்கிணைத்த குழுவினர் PHOTO SHOOT காக இந்த கார் பயன்படுத்தியதாகவும், அதுவும் EVP அரங்கில் எடுக்கப்பட்டது எனவும் விளக்கமளித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

VCK clarifies the controversy surrounding the car with registration number TN 07 CM 2031


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->