'தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை இல்லை': முறைப்படுத்தவே சுற்றறிக்கை; டிஜிபி தரப்பில் நீதிமன்றத்தில் விளக்கம்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சேவல் சண்டைக்கு தடை விதிக்கப்படவில்லை என்றும், முறைப்படுத்தவே சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக டிஜிபி தரப்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் கோயில் திருவிழாக்களில் சேவல் சண்டை நடத்த அனுமதி வழங்கக் கோரி ஈரோட்டைச் சேர்ந்த ஆர்.அருண்குமார் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அந்த மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது; ''காவல் துறை விதிக்கும் நிபந்தனைகளைப் பின்பற்றியே தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் இந்தப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதில் சூதாட்ட நோக்கம் இல்லை. அதேபோல் விலங்குகள் துன்புறுத்தப்படுவதும் இல்லை. சேவல் சண்டைக்கு தடை விதித்து டிஜிபி பிறப்பித்துள்ள சுற்றறிக்கையை ரத்து செய்து, சேவல் சண்டை போட்டிகளை நடத்த அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்.'' எனக் கோரிக்கை வைத்திருந்தார்.

குறித்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி வி.லட்சுமிநாராயணன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, டிஜிபி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், உயர் நீதிமன்ற மதுரை அமர்வின் உத்தரவின்படி, சேவல் சண்டையை முறைப்படுத்தவே டிஜிபி சுற்றறிக்கை பிறப்பித்ததாகவும், சேவல் சண்டைக்கு எந்த தடையும் விதிக்கவில்லை என்று விளக்கம் அளிக்கப்பட்டிருந்தது.

இதனைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிஜிபியின் இந்த சுற்றறிக்கை குறித்து போலீஸாருக்கு தெளிவுபடுத்த வேண்டும் என உத்தரவிட்டார். அத்துடன், சேவல் சண்டைக்கு எந்த தடையும் இல்லாததால், மனுதாரர் சம்பந்தப்பட்ட காவல் துறையினரை அணுகி அனுமதி பெற்றுக் கொள்ளலாம் என்றும் உத்தரவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The DGPs office has clarified in court that there is no ban on rooster fighting in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->