மதுராந்தகம் இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளரை ஆதரித்து செப்டம்பர் 24-ல் மாமண்டூரில் எடப்பாடி பழனிசாமி தீவிரப் பிரச்சாரம்! - Seithipunal
Seithipunal


செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கு வரவிருக்கும் இடைத்தேர்தல் களம் தற்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது. இத்தேர்தலில் போட்டியிடும் அனைத்துப் பிரதான அரசியல் கட்சிகளும் தங்களது வேட்பாளர்களை அறிவித்து, வாக்கு சேகரிக்கும் பணிகளில் அதிதீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வகையில், இத்தொகுதியில் களம் காணும் அதிமுக வேட்பாளரின் வெற்றியை உறுதி செய்யும் பொருட்டு, அதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி நேரடியாகக் களமிறங்கித் தீவிரப் பிரச்சாரத்தில் ஈடுபடவுள்ளார். இதற்காக வரும் செப்டம்பர் 24-ஆம் தேதி செங்கல்பட்டு அருகே உள்ள மாமண்டூர் பகுதியில் தனது முதற்கட்டப் தேர்தல் பரப்புரையை அவர் முறைப்படி தொடங்குகிறார்.

இப்பரப்புரை கூட்டத்தில் அதிமுகவின் மூத்த தலைவர்கள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் கூட்டணிக் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் திரளாகப் பங்கேற்கவுள்ளனர். மாமண்டூரில் தொடங்கும் இந்த எழுச்சிமிக்கப் பிரச்சாரப் பயணம், தொகுதியின் பல்வேறு கிராமப் பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படவுள்ளது. ஆளுங்கட்சியின் சாதனைக் குறைபாடுகளையும், மக்கள் சந்திக்கும் அத்தியாவசியப் பிரச்சினைகளையும் முன்வைத்து எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரிக்க உள்ளதால், அதிமுக தொண்டர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Madhuranthakam By-Election EPS to Kickstart Campaign at Mamandur on September 24 in Support of AIADMK Candidate


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




Seithipunal
--> -->