விஜய் செய்தியாளர்களைச் சந்திக்காதது ஏன்? வைரலாகும் ராஜ் மோகனின் 'நானும் விஜய்' ஸ்பீச்...!
Why did Vijay not meet journalists Raj Mohan I am also Vijay speech going viral
என்டிடிவி (NDTV) ஊடகத்தின் 'தமிழ்நாடு உச்சி மாநாட்டை' ஒட்டி, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பிரத்யேக நேர்காணல் அளித்ததாக வெளியான தகவல், அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
விஜய்யைச் சந்தித்த செய்தியாளர்கள், அவரது கருத்துகளைப் பகிர்ந்த விதம் தமிழக அரசியலில் ஒரு புதிய விவாதப் பொருளாகப் பார்க்கப்பட்டதுடன், இணையதளங்களிலும் கடுமையான விமர்சனங்களுக்கு உள்ளானது.

இத்தகையச் சூழலில், "கட்சித் தலைவர் விஜய் ஏன் நேரடியாக ஊடகவியலாளர்களைச் சந்திப்பதில்லை?" என்ற காரசாரமான கேள்வியை த.வெ.க. நிர்வாகி ராஜ் மோகனிடம் செய்தியாளர்கள் முன்வைத்தனர்.
அதற்கு மிகச் சுவாரசியமாகவும், தத்துவார்த்த ரீதியாகவும் பதிலளித்த ராஜ் மோகன்,"நானும் விஜய்.. இங்கிருப்பவர்களும் விஜய்.. இந்தச் சகோதரியும் விஜய்.. நாங்கள் அனைவருமே விஜய்தான்! எளிய வீட்டுப் பிள்ளைகளாகிய நாங்கள், பத்திரிகையாளர்களைச் சந்திக்கும் இந்த அரிய வாய்ப்பைத் தலைவர் விஜய் எங்களுக்குத் தந்துள்ளார்.
இப்போது நாங்கள் உங்களைச் சந்திக்கிறோம்; காலமும் சூழலும் கூடி வரும்போது, அவரே உங்களைச் சந்திக்கும் அந்த நிகழ்வும் நிச்சயம் அரங்கேறும்" எனத் தனது பாணியில் வித்தியாசமான விளக்கத்தை அளித்துச் செய்தியாளர்களை ஆச்சரியப்படுத்தினார்.
English Summary
Why did Vijay not meet journalists Raj Mohan I am also Vijay speech going viral