மேகா குடும்பத்தில் மகிழ்ச்சி வெள்ளம்… ராம் சரண்–உபாசனாவுக்கு ட்வின்ஸ்...!
flood joy Mega family Ram Charan and Upasana having twins
தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக விளங்கும் ராம் சரண், 2012ஆம் ஆண்டு தொழிலதிபர் உபாசனாவை திருமணம் செய்து கொண்டார். நீண்டநாள் காத்திருப்பிற்குப் பிறகு, 11 ஆண்டுகள் கழித்து 2023ஆம் ஆண்டு இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

அந்த குட்டி தேவதைக்கு ‘கிளின் காரா’ என அழகான பெயர் சூட்டி, குடும்பமே கொண்டாட்டத்தில் மூழ்கியது.இதனைத் தொடர்ந்து, உபாசனா மீண்டும் கர்ப்பமாக இருப்பதாக தகவல் வெளியானதும், குடும்பத்தினர் மட்டுமல்லாமல் ரசிகர்களும் புதிய வரவுக்காக ஆவலுடன் காத்திருந்தனர்.
இந்த நிலையில், ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி அளிக்கும் செய்தி வெளியாகியுள்ளது. ராம் சரண்–உபாசனா தம்பதிக்கு நேற்று இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளதாக, ராம் சரணின் தந்தையும் நடிகருமான சிரஞ்சீவி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் (X) தள பதிவில், “மகிழ்ச்சியில் மனம் நிறைகிறது. ராம் சரண் மற்றும் உபாசனாவுக்கு ஒரு ஆண் குழந்தையும், ஒரு பெண் குழந்தையும் பிறந்துள்ளனர். தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக உள்ளனர்.
தாத்தா, பாட்டிகளாக இந்த புதிய உயிர்களை வரவேற்பது எங்களுக்கு பேரானந்தம். அனைவரின் அன்பும், ஆசீர்வாதங்களும் எங்களுக்கு பெரும் ஆதரவு,” என்று உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.
இந்த இனிய செய்தி வெளிவந்ததையடுத்து, ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளங்களில் வாழ்த்துகளை குவித்து வருகின்றனர்.
English Summary
flood joy Mega family Ram Charan and Upasana having twins