விஜய் வந்ததும்தான் திரிஷா நார்மல் ஆனாங்க! 'திருப்பாச்சி' படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்.!இயக்குநர் பேரரசு உடைத்த சீக்ரெட்!
Trisha only returned to her normal self after Vijay arrived a secret revealed by Director Perarasu
சென்னை: நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா இணைந்து நடித்த திருப்பாச்சி திரைப்படத்தின் படப்பிடிப்பின்போது நடந்த ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை இயக்குநர் பேரரசு சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ளார்.
விஜய்–திரிஷா ஜோடி கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி, லியோ உள்ளிட்ட பல படங்களில் இணைந்து நடித்துள்ளது. குறிப்பாக கில்லி மற்றும் திருப்பாச்சி திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றன.
சமீபத்தில் அளித்த பேட்டியில், திருப்பாச்சி படத்தில் கடற்கரையில் விஜய் மற்றும் திரிஷா இடம்பெறும் காட்சியின் படப்பிடிப்பு அனுபவத்தை பேரரசு நினைவுகூர்ந்தார்.
அவர் கூறுகையில், "அந்த காட்சிக்காக தேர்வு செய்யப்பட்ட உடை முதலில் திரிஷாவுக்கு பிடிக்கவில்லை. நான் நேரில் சென்று, அந்த உடை காட்சிக்கு பொருத்தமாக இருக்கும் என்று விளக்கினேன். அதன் பிறகு அவர் அரை மனதுடன் அந்த உடையை அணிந்து வந்து, சிறிது மனவருத்தத்துடன் அமர்ந்திருந்தார்.
பின்னர் விஜய் தனது உடையுடன் படப்பிடிப்புக்கு வந்தார். அவர் அணிந்திருந்த உடையை பார்த்ததும், 'நமக்கு இதைவிட பரவாயில்லை' என்று திரிஷா நினைத்துக் கொண்டார். அதன் பிறகு அவரது மனநிலையும் மாறியது. அந்த நேரத்தில் அவரது கோபத்தை குறைத்தது விஜய் அணிந்திருந்த உடைதான்," என்று சிரிப்புடன் தெரிவித்தார்.
பேரரசு பகிர்ந்த இந்த அனுபவம் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
இதற்கிடையில், விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு தனிப்பட்ட ஊகங்கள் தொடர்ந்து பரவி வருகின்றன. ஆனால், அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட இருவரும் எந்த அதிகாரப்பூர்வ விளக்கமும் அளிக்கவில்லை. எனவே, அவை உறுதிப்படுத்தப்படாத தகவல்களாகவே பார்க்கப்படுகின்றன.
English Summary
Trisha only returned to her normal self after Vijay arrived a secret revealed by Director Perarasu