அனுபமா காதல் விவகாரம்! அனுபமா பரமேஸ்வரன் சொன்னது அந்த வாரிசு நடிகர்தான்!ல்லாம் பண திமிர்.. வெளுத்துவிட்ட பிரபலம்!
Anupama romance rumors Anupama Parameswaran pointed to that star kid It all arrogance born of wealth A celebrity slams the situation
நடிகை அனுபமா பரமேஸ்வரனின் காதல் விவகாரம் தொடர்பான பேச்சு, தற்போது திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் ‘பைசன்’, ‘டிராகன்’ உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள அனுபமாவுக்கும், நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரமுக்கும் இடையே காதல் இருப்பதாக ஏற்கனவே பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், சமீபத்தில் அனுபமா அளித்த பேட்டி அந்த விவாதத்தை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
மலையாள ஊடகம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் தனது கடந்தகால காதல் குறித்து பேசிய அனுபமா, தான் காதலித்த நபர் சில நேரங்களில் முற்றிலும் மாறுபட்ட குணநலன்களுடன் நடந்துகொண்டதாகவும், காதல் தொடங்கிய சில மாதங்களிலேயே நிச்சயதார்த்தம் செய்ய வற்புறுத்தியதாகவும் கூறியிருந்தார். மேலும், தன்னை முழுமையாகக் கட்டுப்படுத்த முயன்றதால் அந்த உறவில் இருந்து விலகியதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
அனுபமா தனது முன்னாள் காதலரின் பெயரை குறிப்பிடவில்லை. இருப்பினும், ஏற்கனவே துருவ் விக்ரமுடன் அவருக்கு காதல் இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் பரவி வந்ததால், அனுபமா கூறியது துருவ்வை பற்றித்தான் என சிலர் சமூக வலைதளங்களில் விவாதிக்கத் தொடங்கினர். இதற்கு இதுவரை அனுபமா தரப்பிலிருந்தோ அல்லது துருவ் விக்ரம் தரப்பிலிருந்தோ அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகவில்லை.
இந்த நிலையில், மூத்த பத்திரிகையாளர் செய்யாறு பாலு தனது வீடியோ ஒன்றில் அனுபமாவின் பேட்டி குறித்து பேசியுள்ளார். அனுபமா தனது காதல் உறவில் கடுமையான மன அழுத்தத்தை எதிர்கொண்டதாகவும், அவரை நடிப்பில் இருந்து விலக்கி திருமணத்திற்கு வற்புறுத்தும் முயற்சி நடந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒரு நடிகை என்பதற்காக அவருடைய தொழில் மற்றும் தனிப்பட்ட முடிவுகளை மற்றவர்கள் கட்டுப்படுத்த முயற்சிப்பது தவறானது என்றும் செய்யாறு பாலு விமர்சித்துள்ளார். அனுபமா நடுத்தரக் குடும்பப் பின்னணியில் இருந்து பல்வேறு சவால்களை கடந்து திரைத்துறையில் முன்னேறியவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதேபோல், அனுபமா தனது பேட்டியில் குறிப்பிட்ட நபர் துருவ் விக்ரம்தான் என்று தான் கருதுவதாகவும் செய்யாறு பாலு பேசியுள்ளார். ஆனால், இது அவரது தனிப்பட்ட கருத்து மட்டுமே; அனுபமா தனது முன்னாள் காதலரின் அடையாளத்தை வெளிப்படையாக குறிப்பிடவில்லை.
இதனால், அனுபமா பரமேஸ்வரன் - துருவ் விக்ரம் இடையேயான காதல் குறித்த பழைய பேச்சுகள் மீண்டும் சமூக வலைதளங்களில் தீவிரமடைந்துள்ளன. அதே நேரத்தில், ஒருவரின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல் கூறப்பட்ட கருத்துகளை வைத்து உறவை உறுதிப்படுத்துவது சரியானதல்ல என்பதும் குறிப்பிடத்தக்கது.
English Summary
Anupama romance rumors Anupama Parameswaran pointed to that star kid It all arrogance born of wealth A celebrity slams the situation