பள்ளியிலா இந்த அதிர்ச்சி...? சீருடையில் மது அருந்திய மாணவிகள்..அதிரடி நடவடிக்கையில் இறங்கிய அதிகாரிகள்...!
Was this shock at school Students who drank alcohol uniform Officers took action
கன்னியாகுமரி மாவட்டத்தில் அரசு பள்ளி ஒன்றில், பள்ளி சீருடையில் மாணவிகள் மதுஅருந்தியதாக வெளியான காணொளி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அந்த காணொளியில், பள்ளி வகுப்பறைக்கு வெளியே மேஜை ஒன்றை அமைத்து, அதில் உணவு மற்றும் மதுஅருந்தும்போது சாப்பிடக்கூடிய தின்பண்டங்கள் வைக்கப்பட்டுள்ளன. அங்கு பள்ளி சீருடையில் இருக்கும் இரு மாணவிகள், பாட்டிலில் இருந்த மதுவை மாறி மாறி அருந்துகின்றனர்.

இதனை மற்றொரு மாணவி தனது செல்போனில் பதிவு செய்துள்ளார். அப்போது, மதுஅருந்துவதை ஏன் காணொளியாக பதிவு செய்கிறாய் என ஒரு மாணவி கேட்பது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.இந்த காணொளி தொடர்பாக தகவல் அறிந்த கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியில் நேரில் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில், தக்கலை பகுதியில் செயல்பட்டு வரும் அரசு பள்ளியிலேயே இந்த சம்பவம் நடைபெற்றது உறுதி செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், விடுமுறை நாளில் நடைபெற்ற சிறப்பு வகுப்பின்போதே மாணவிகள் மதுஅருந்தியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதையடுத்து, பள்ளியில் நடைபெற்ற சம்பவம் தொடர்பாக நிர்வாக ரீதியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை நாகர்கோவிலில் உள்ள மற்றொரு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
மேலும், பள்ளி வளாகத்திற்குள் மாணவிகளுக்கு மதுபாட்டில் எவ்வாறு கிடைத்தது, அதனை அவர்கள் எங்கிருந்து பெற்றனர் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் கல்வித்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த சம்பவம் மாணவர்கள் மத்தியில் போதைப்பொருள் மற்றும் மதுப்பழக்கத்தைத் தடுப்பதன் அவசியம் குறித்து மீண்டும் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Was this shock at school Students who drank alcohol uniform Officers took action