அரசியல் சதுரங்கத்தில் அசுர வேகம்! மார்ச் முதல் சூறாவளிப் பிரச்சாரம்; கூட்டணி கட்சிகளை பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் தி.மு.க...! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களது வியூகங்களை வகுப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. கோட்டையைத் தக்கவைத்துக்கொள்ள தி.மு.க. கூட்டணியும், இழந்த செல்வாக்கை மீட்டு ஆட்சிக் கட்டிலில் அமர அ.தி.மு.க. - பா.ஜ.க. அணிகளும் மல்லுக்கட்டி வருகின்றன.

மேலும் ஆளுங்கட்சியான தி.மு.க., தனது கூட்டணிக் கட்சிகளுடன் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையை முன்னெடுக்க, கட்சியின் பொருளாளர் டி.ஆர்.பாலு தலைமையில் ஒரு 'உயர்நிலைக் குழுவை' அமைக்கத் திட்டமிட்டுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ

அறிவிப்பு நாளை வெளியாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.இந்தக் குழு, கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் (VCK), கம்யூனிஸ்ட் உள்ளிட்ட தோழமைக் கட்சிகளுடன் வரிசையாகப் பேச்சுவார்த்தை நடத்தி, இடங்களைப் பகிர்ந்தளிக்க உள்ளது.

காலதாமதத்தைத் தவிர்க்கும் பொருட்டு, பிப்ரவரி மாத இறுதிக்குள்ளேயே தொகுதிப் பங்கீட்டுப் படலத்தை முழுமையாக நிறைவு செய்துவிட்டு, மார்ச் மாத தொடக்கத்தில் சூறாவளிப் பிரச்சாரத்தைத் தொடங்கத் திட்டமிட்டுள்ளனர்.

இதேவேளையில், கூட்டணியில் இணைவதற்கு தே.மு.தி.க. ஆர்வம் காட்டி வருவதாக வெளியாகும் தகவல்கள், தேர்தல் களத்தில் புதிய திருப்பங்களை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

whirlwind campaign from March DMK invites alliance partners talk


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->