திரிஷா ரொம்ப நல்லவங்க.. எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர்- நடிகை குஷ்பூ ஓபன் டாக்! - Seithipunal
Seithipunal


நடிகை திரிஷா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக தொடர்ந்து தனது இடத்தை தக்கவைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான 'கருப்பு' திரைப்படத்தின் வெற்றிக்குப் பிறகு, அவரது அடுத்தடுத்த படங்களான 'விஸ்வம்பரா' உள்ளிட்ட படங்கள் மீதும் ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதற்கிடையில், கடந்த சில மாதங்களாக திரிஷா குறித்து பல்வேறு வதந்திகள் மற்றும் சர்ச்சைகள் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வரும் நிலையில், நடிகையும் தயாரிப்பாளருமான குஷ்பூ அளித்துள்ள பேட்டி கவனம் ஈர்த்துள்ளது.

தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் குஷ்பூ, திரிஷாவைப் பற்றி மிகவும் பாசத்துடன் பேசியுள்ளார்.

அதில், "திரிஷா மிகவும் நல்ல மனம் கொண்டவர். அவர் எங்கள் குடும்பத்தில் ஒருவரைப் போன்றவர். என் குழந்தைகளுடன் மிகவும் நெருக்கமாக பழகுவார். என் மகளின் திருமணத்தின்போது கூட எங்கள் வீட்டிலேயே நான்கு நாட்கள் தங்கி இருந்தார். அதுதான் திரிஷா. அவர் எப்போதும் அன்பும், பாசமும் நிறைந்த மனிதர்" என்று தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பல்வேறு விமர்சனங்களும் வதந்திகளும் பரவி வந்தாலும், அவற்றுக்கு அவர் எந்தவித பதிலும் அளிக்காமல் அமைதியாக இருந்து வருகிறார்.

இந்த சூழலில், குஷ்பூ பகிர்ந்துள்ள இந்த கருத்துகள் திரிஷாவின் தனிப்பட்ட குணநலன்களை வெளிப்படுத்துவதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும், "திரிஷாவைப் பற்றி நெருக்கமாக அறிந்த ஒருவர் கூறிய பாராட்டு இது", "உண்மையான நட்புக்கு இது ஒரு உதாரணம்" என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Trisha is a wonderful person she is like a member of our family Actress Khushbu speaks openly


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->