"TVK பெயர் எப்படி வந்தது?" ஜனநாயகன் படத்தில் அப்படி வைக்க என்ன காரணம்! ரகசியத்தை உடைத்த ஹெச். வினோத்! - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய்யின் கடைசி திரைப்படமாக வெளியான 'ஜனநாயகன்' ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. இயக்குநர் ஹெச். வினோத் இயக்கிய இந்த படம் கடந்த மாதம் 23-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. வெளியீட்டுக்கு முன்பே படம் இணையத்தில் கசிந்தது, சென்சார் மற்றும் நீதிமன்றம் தொடர்பான சிக்கல்களையும் சந்தித்தது. இருப்பினும், விஜய் ரசிகர்களின் வரவேற்பால் படம் திரையரங்குகளில் நல்ல ஓப்பனிங்கை பெற்றது.

இந்த படத்தில் விஜய் நடித்த கதாபாத்திரத்தின் பெயர் "தளபதி வெற்றி கொண்டான் (TVK)" என்பது ரசிகர்களிடையே அதிகம் பேசப்பட்டது. அவரது அரசியல் கட்சியின் சுருக்கப் பெயருடன் இந்த கதாபாத்திரத்தின் பெயர் ஒத்துப்போனதால், இது திட்டமிட்டு வைக்கப்பட்டதா என்ற கேள்வியும் எழுந்தது.

இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் இயக்குநர் ஹெச். வினோத் விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், "ஆரம்பத்தில் கதை விவாதத்தின் போது டாட்டூ தொடர்பான ஒரு காட்சி இருந்தது. அதை இன்னும் சுவாரஸ்யமாக மாற்ற வேண்டும் என்று நினைத்தோம். அதே நேரத்தில் விஜய் 'TVK' என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். அதனால் அவரை படத்தில் வெறும் தளபதியாக மட்டுமல்ல, ஒரு தலைவராகவும் காட்ட வேண்டும் என்று முடிவு செய்தோம்" என்றார்.

மேலும், "'தளபதி வெற்றி கொண்டான்' என்று பெயர் வைத்தால் அதன் ஆங்கில சுருக்கம் TVK ஆக வரும். 'வெற்றி' என்ற வார்த்தையும் அரசியல் ரீதியாக ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். ரசிகர்கள் அதை ரசிப்பார்கள் என்று நம்பினோம். அதனால்தான் அந்த பெயரை கதாபாத்திரத்திற்கு வைத்தோம்" என வினோத் தெரிவித்துள்ளார்.

'ஜனநாயகன்' திரைப்படம் குறித்து கலவையான விமர்சனங்கள் வெளியானாலும், விஜய்யின் அரசியல் பயணத்தை நினைவூட்டும் வகையில் இடம்பெற்ற பல காட்சிகளும், குறிப்பாக TVK கதாபாத்திரப் பெயரும் ரசிகர்கள் மத்தியில் தனி கவனத்தை பெற்றது. ஹெச். வினோத்தின் இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How did the name TVK come about What was the reason for choosing that name for the movie Jananayagan H Vinoth reveals the secret


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->