தமிழக முதல்வர் விஜய்க்கு எதிராக மனைவி சங்கீதா கொடுத்த விவகாரத்து வழக்கு வாபஸ்..!
The case filed by his wife Sangeeta against Chief Minister Vijay withdrawn
தமிழக முதல்வர் விஜய் -சங்கீதா விவகாரத்து வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.விஜய்யின் மனைவி சங்கீதா லண்டலின் இருந்து நேரலையாக செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் 20 நிமிடங்கள் வரை விசாரணை நடைபெற்றதாக கூறப்பட்ட நிலையில் தற்போது சங்கீதா தனது விவாகரத்து மனுவை திரும்ப பெற்றதாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக இந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், வழக்கு நீதிமன்றம் முடித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முதலமைச்சரும், தவெக தலைவருமான விஜய்க்கும், அவரது மனைவி சங்கீதாவுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், கணவர் விஜய்யிடம் இருந்து விவாகரத்து கோரி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
குறித்த மனுவை விசாரித்த செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றம், இருவரையும் ஆஜராக உத்தரவிட்டு வழக்கை கடந்த ஏப்ரல் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது. அப்போது தமிழக சட்டபைத்தேர்தலுக்கு 03 நாள் மட்டுமே இருந்ததால் விஜய் ஆஜாரவில்லை. அத்துடன், சங்கீதாவும் ஆஜராகாததால், ஜூன் 15-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

ஆனால், அன்றும் இருவரும் ஆஜராகவில்லை. இருவரும் பிரபலங்கள் என்பதால் காணொளி காட்சி வாயிலாக ஆஜராக அனுமதிக்க வேண்டுமென இருதரப்பு வழக்கறிஞர்களும் கோரிக்கை விடுத்தனர்.
அதன்படி, இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருவரும் காணொளி காட்சி வாயிலாக ஆஜராகி விளக்கம் அளிக்கும் வகையில் இணையதள முகவரி சமர்ப்பிக்கப்பட்டு விசாரணை நடந்தது.

அதன்படி, முதலில் சங்கீதாவிடம் காணொளி காட்சி மூலமாக விசாரணை துவங்கியது. நீதிமன்றத்தில் அனைத்து வாயில்களும் மூடப்பட்ட நிலையில் சங்கீதாவிடம் லண்டனில் இருந்து காணொளி காட்சி மூலமாக 20 நிமிடங்கள் வரை விசாரணை நடந்தது. முதலில் சிறிது நேரம் வழக்கு விசாரணை ஒத்திவைக்கப்பட்டது.
இன்று தமிழக சட்டசபை தேர்தலில் பொது பட்ஜெட், வேளாண் பட்ஜெட் குறித்து விவாதம் நடைபெற்றதால் முதலமைச்சர் விஜய் விசாரணைக்கு ஆஜராகவில்லை. இதன்காரணமாக அடுத்த விசாரணைக்கான தேதி இன்று மாலை தெரிவிக்கப்படும் என நீதிபதி கூறியதாக வழக்கறிஞர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் முதல்வர் விஜய்யின் மனைவி சங்கீதா தனது வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
English Summary
The case filed by his wife Sangeeta against Chief Minister Vijay withdrawn