கள் விற்பனை தடையை நீக்க கோரிய வழக்கு; தமிழக அரசு பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு..!
High Court orders Tamil Nadu government to respond in case seeking lifting of ban on sale of toddy
மதுரை மாவட்டம் ஒத்தக்கடையை சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர், உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், ''தமிழகத்தில் தென்னை, பனை மரங்களில் கள் இறக்கவும், விற்பனைக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடையை மறு ஆய்வு செய்யவும், தென்னை மற்றும் பனங்கள் இறக்கவும், விற்கவும் அனுமதிக்கும் வகையில் உரிய கொள்கையை உருவாக்கவும் அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் சி.வி.கார்த்திகேயன் மற்றும் சக்திவேல் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரரின் கோரிக்கை தொடர்பாக தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது. அத்துடன், இதே கோரிக்கை தொடர்பாக நிலுவையில் இருக்கும் மற்ற வழக்கோடு சேர்த்து விசாரணைக்கு பட்டியலிட உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டுள்ளது.
English Summary
High Court orders Tamil Nadu government to respond in case seeking lifting of ban on sale of toddy