விஜய் தேவரகொண்டா -ராஷ்மிகா திருமணம் எப்போது, எங்கு நடக்கிறது தெரியுமா? - Seithipunal
Seithipunal


நீண்டநாட்களாக காதலித்து வரும் நடிகை ரஷ்மிகா மந்தனா மற்றும் நடிகர் விஜய் தேவரகொண்டா சமீபத்தில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இதுவரை இருவரும் திருமணத்தைப் பற்றிய எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.

தெலுங்கு திரைத்துறையில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த செய்தி படி, ரஷ்மிகா மற்றும் விஜய் தேவரகொண்டா இருவரும் 2025 அக்டோபர் மாதத்தில் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் நிச்சயதார்த்தம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக, திருமணம் 2026 பிப்ரவரி 26ஆம் தேதி ராஜஸ்தானின் உதய்பூர் அரண்மனையில் நடைபெறவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. திருமணம் “ராஜ வம்ச பாணியில்” பிரம்மாண்டமாக நடைபெறும் என்றும், தென்னிந்திய மற்றும் பாலிவுட் பிரபலங்கள் பங்கேற்கும் வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக விஜய் தேவரகொண்டாவின் குழு இவர்களின் நிச்சயதார்த்தத்தை உறுதி செய்துள்ளதாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் திருமண தேதி மற்றும் இடம் குறித்து இதுவரை இருவரின் தரப்பிலிருந்தும் அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வரவில்லை.

சமீபத்தில் நிச்சயதார்த்தம் குறித்து ஊடகங்கள் கேட்டபோது, ரஷ்மிகா “அது எல்லோருக்கும் தெரியும்” என்று புன்னகையுடன் பதிலளித்தது ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது. இதன் பின்னர் இருவரது திருமண தகவல்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.

திரைப்பட ரீதியாக ரஷ்மிகா மந்தனா தற்போது தொடர்ந்து வெற்றிப் படங்களில் நடித்து வருகிறார். “புஷ்பா” படத்தின் மூலம் உலகளவில் பிரபலமான அவர், தென்னிந்தியாவைத் தாண்டி பாலிவுட்டிலும் பிஸியாக நடித்து வருகிறார். நேஷனல் க்ரஷ் என ரசிகர்களால் அழைக்கப்படும் ரஷ்மிகா தற்போது தெனிந்தியாவின் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்கிறார்.

மறுபுறம், விஜய் தேவரகொண்டா தனது சமீபத்திய படங்களால் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. தொடர் தோல்விகளுக்குப் பிறகு தற்போது ஒரு பீரியட் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இருவரின் திருமணத்தைச் சுற்றியுள்ள வதந்திகள் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Do you know when and where Vijay Deverakonda Rashmika wedding will take place


கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?



Advertisement

கருத்துக் கணிப்பு

SIR-யை திமுக கூட்டணி கட்சிகள் எதிர்ப்பது?


செய்திகள்



Seithipunal
--> -->