காட்டுப்பகுதிக்கு ஏன் போக வேண்டும்? ரூம் போட்டு பேசுங்க...! நடிகை கஸ்தூரி அறிவுரை!
Coimbatore assault case Kasturi
மதுரையை சேர்ந்த 21 வயது கல்லூரி மாணவி, கோவையில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார். விடுதியில் தங்கி வந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை தனது காதலனுடன் காரில் விமான நிலையத்தின் பின்புறம் உள்ள பிரிந்தாவன் நகர் காட்டுப்பகுதியில் பேசிக்கொண்டு இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த சதீஷ் (கருப்புசாமி), கார்த்திக் (காளீஸ்வரன்) மற்றும் மதுரையைச் சேர்ந்த குணா (தவசி) ஆகிய மூவர், காதலனை அரிவாளால் தாக்கி காயப்படுத்தி, பின்னர் மாணவியை கடத்திச் சென்று கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர்.
தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து, தப்பிச் செல்ல முயன்ற குற்றவாளிகளை துப்பாக்கியால் சுட்டு பிடித்தனர். காயமடைந்த மூவரும் தற்போது கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த கொடூரச் சம்பவத்துடன் தொடர்புடையதாக, போலீசார் ஆறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் தீவிரம் காரணமாக, மாநிலம் முழுவதும் பரபரப்பு நிலவுகிறது.
இதனைத் தொடர்ந்து, எதிர்க்கட்சிகள் திமுக அரசை கடுமையாக விமர்சித்துள்ளன. சட்டம்-ஒழுங்கு சரிந்து விட்டது, பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என அதிமுகவும் பாஜகவும் குற்றம்சாட்டின.
இந்நிலையில், பாஜகவின் நடிகை கஸ்தூரி வெளியிட்ட கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. “பெண்கள் இரவு நேரங்களில் வெளியில் செல்லக்கூடாது. பாதுகாப்பான இடங்கள் இருக்கும்போது காட்டுப்பகுதியில் ஏன் போக வேண்டும்? பெண் மட்டும் அல்ல, ஆண்களும் இரவில் சுற்றக்கூடாது. அவசியமாக பேச வேண்டுமெனில், ரூம் எடுத்து பேசலாம்” என தெரிவித்துள்ளார்.
English Summary
Coimbatore assault case Kasturi