500 ரூபாய் சம்பளம் வாங்கியபோது இருந்த சந்தோஷம் இப்போது இல்லை; இளம்வயதை நினைவு கூர்ந்த அனிருத்..!
Anirudh says that he doesnt have the same happiness now that he had when he was earning a salary of 500 rupees
தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளர்களில் முதன்மையானவராக வளம் வருபவர் அனிருத். தற்போது வெளிவரும் மிக பெரிய ஹீரோக்கள், இயக்குனர்களில் படத்தில், இவருடைய இசையமைப்புதான் முக்கிய முதல் தேர்வாக உள்ளது. அந்த அளவிற்கு மிகவும் வெற்றிகரமான இசையமைப்பாளராக அனிருத் வளம் வருகிறார்.
இந்நிலையில் அண்மையில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அனிருத், தனது சிறுவயது நினைவை பகிர்ந்து, பணம் சம்பாதிப்பது குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
அதாவது, சிறிய வயதில் திருமண நிகழ்ச்சிகளுக்கு வாசிக்க செல்லும்போது 500 ரூபாய் சம்பளமாக கொடுத்திருக்கிறார்கள். அப்போது இனம் புரியாத ஒரு சந்தோஷம் எனக்குள் ஏற்படும். சில நிகழ்வுகளில் சம்பளம் தராமல் வெறும் வெற்றிலை, பாக்கு மட்டும் கொடுத்து நன்றி சொல்லி அனுப்பி விடுவார்கள்.
ஆனால், இப்போது கோடிகளில் சம்பளம் கிடைக்கிறது. தற்போது முன்பு இருந்த சந்தோஷம் இல்லை. என்னதான் வேலையில் பரபரப்பாக இருந்தாலும் அந்த சிறுவயது சந்தோஷத்தை மட்டும் மறக்கவே முடியாது என்று பேசியுள்ளார்.
English Summary
Anirudh says that he doesnt have the same happiness now that he had when he was earning a salary of 500 rupees