பாலிவுட்டில் வெடித்தது புதிய புயல்! 'டான் 3' சர்ச்சை எதிரொலி... ரன்வீர் சிங் படங்களைப் புறக்கணிக்கத் தொழிலாளர்கள் அதிரடி முடிவு...!
new storm erupted Bollywood Don 3 controversy echoes Workers take drastic decision to boycott Ranveer Singh films
ரன்வீர் சிங் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘துரந்தர்’ திரைப்படம் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியை பதிவு செய்து பாலிவுட் திரையுலகில் கவனம் ஈர்த்துள்ளது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, இயக்குனர் பர்ஹான் அக்தர் இயக்கத்தில் உருவாகவிருந்த ‘டான் 3’ திரைப்படத்தில் ரன்வீர் சிங் நடிக்க இருந்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால், படப்பிடிப்பு பணிகள் தொடங்குவதற்கு முன்பாகவே ரன்வீர் சிங் திடீரென அந்த படத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியாகி பாலிவுட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இதற்கிடையில், ‘டான் 3’ திரைப்படத்திற்கு பதிலாக இயக்குனர் ஜெய் மேத்தா இயக்கத்தில் உருவாகி வரும் ‘ப்ராளே’ படத்தில் ரன்வீர் சிங் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், ‘டான் 3’ திரைப்படத்தில் இருந்து கடைசி நேரத்தில் விலகிய விவகாரம் தொடர்பாக, நடிகர் ரன்வீர் சிங்கிற்கு எதிராக மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளது.மேலும், இனி ரன்வீர் சிங் நடிக்கும் திரைப்படங்களில் பணியாற்ற மாட்டோம் என அந்த அமைப்பு அறிவித்திருப்பது திரையுலகில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து கூட்டமைப்பு தரப்பில் வெளியிடப்பட்ட தகவலில், “இந்த விவகாரம் தொடர்பாக ரன்வீர் சிங்கிடம் விளக்கம் கேட்டு 10 நாட்கள் இடைவெளியில் மூன்று முறை நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதன்பின்னரும் மூன்று முறை நினைவூட்டல் கடிதங்கள் அனுப்பப்பட்டன. எனினும், அவரிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “ரன்வீர் சிங் தரப்பில் தொடர்ந்து அலட்சியமான அணுகுமுறை காணப்பட்டதால், கூட்டமைப்பின் அடுத்தகட்ட முடிவுகளை அறிவிக்க பத்திரிகையாளர் சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டது” என்றும் கூறப்பட்டுள்ளது.அந்த நேரத்தில், “இந்த விவகாரம் கூட்டமைப்பின் வரம்புக்குள் வராது” என்று ரன்வீர் சிங் தரப்பில் இருந்து மின்னஞ்சல் மூலம் தகவல் வந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, மேற்கு இந்திய திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு அவசர ஆலோசனை கூட்டம் நடத்தி, இனி ரன்வீர் சிங் நடிக்கும் திரைப்படங்களில் தங்களது உறுப்பினர்கள் பணியாற்ற மாட்டார்கள் என்ற ஒருமித்த முடிவை எடுத்துள்ளதாக பத்திரிகையாளர் சந்திப்பில் அறிவித்துள்ளது.இந்த அறிவிப்பு பாலிவுட் திரையுலகில் புதிய சர்ச்சையையும் பரபரப்பையும் உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
English Summary
new storm erupted Bollywood Don 3 controversy echoes Workers take drastic decision to boycott Ranveer Singh films