மேலூர் FQL மோசடி வழக்கு; கைது செய்யப்பட்ட ரஞ்சித் - ப்ரியதர்ஷினி தம்பதி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை..! - Seithipunal
Seithipunal


மதுரை, மேலூர் FQL மோசடி தொடர்பாக கட்டையம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித், அவரது மனைவி பிரியதர்ஷினி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 

இவர்கள் 45 நாட்களில் முதலீட்டுத் தொகையை இரட்டிப்பாக்கித் தருவதாக கூறி பண மோசடி செய்ததாக தென்மாவட்டங்களை சேர்ந்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர்.

(FQL, வி.ஜி.) எனும் இணைய வழி செயலிகள் மூலம் கிரிப்டோ கரன்சி வர்த்தகம் எனும் பெயரில் 45 நாட்களில் முதலீட்டுத் தொகை இரட்டிப்பாக வழங்கப்படும் என ஆயிரக்கணக்கான மக்களிடம் முதலீடுகளை பெற்று கோடிக்கணக்கில் மோசடியில் ஈடுபட்டுள்ளனர்.

இதில், மேலூர் அருகிலுள்ள கட்டயம்பட்டியைச் சேர்ந்த ரஞ்சித், அவரது தம்பி அருண் ஆகியோர் முகவர்களை நியமித்து இந்த மோசடியை ஈடுபட்டுள்ளது விசாரணையில் தெரிய வந்தது.

இந்நிலையில், இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களைச் சேர்ந்த 45 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புகார் கொடுத்துள்ளனர். குறிப்பாக மேலூர் பகுதியில் மட்டும் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இம்மோசடியில் இதுவரை ரஞ்சித்தின் உறவினர்கள், முகவர்கள் என 23 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைதியுசெய்யப்பட்டுள்ள ரஞ்சித் - ப்ரியதர்ஷினி தம்பதி மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Action taken under the Goondas Act against the couple Ranjith and Priyadarshini arrested in the FQL fraud case


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->