கிளைமாக்ஸ் முதல் காட்சியிலா...? சேலத்தில் 'அன்பில் அவன்' படத்தின் 2-வது பாதியை முதலில் திரையிட்டதால் தியேட்டரில் அரங்கேறிய குழப்பம்...! - Seithipunal
Seithipunal


நடிகர் அசோக் செல்வன், நடிகை பிரீத்தி முகுந்தன் நடிப்பில் வெளியாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம், சேலத்தில் உள்ள ஒரு திரையரங்கில் வித்தியாசமான குழப்பத்துடன் ரசிகர்களை சந்தித்தது. படம் வெளியான முதல் நாளிலேயே ஏற்பட்ட இந்த திரையிடல் குளறுபடியால், படத்தை பார்க்க வந்த ரசிகர்கள் அதிருப்தியடைந்து தங்களது நுழைவுச்சீட்டு கட்டணத்தை திருப்பிக் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

சேலத்தில் வணிக வளாகத்துடன் இணைந்து செயல்படும் திரையரங்கில் நேற்று முன்தினம் ‘அன்பில் அவன்’ திரைப்படம் வெளியானது. காலைக் காட்சி வழக்கம்போல் எந்தவித பிரச்சினையும் இல்லாமல் திரையிடப்பட்டது. இதைத்தொடர்ந்து பிற்பகல் 3.45 மணிக்கு அடுத்த காட்சி தொடங்கியது.

ஆனால், படம் தொடங்கிய சில நொடிகளிலேயே ரசிகர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. வழக்கமாக திரைப்படத்தின் தொடக்கத்தில் இடம்பெறும் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் பெயர்கள் எதுவும் திரையில் இடம்பெறவில்லை. நேரடியாக ஒரு காட்சி திரையில் தோன்றியது.இதனை பார்த்த ரசிகர்கள், கதையை வித்தியாசமான முறையில் தொடங்குவதற்காக இயக்குனர் புதுமையான உத்தியை கையாண்டிருக்கலாம் என நினைத்தனர்.

இதனால் பெரிதாக சந்தேகம் கொள்ளாமல் தொடர்ந்து படத்தை பார்த்தனர். ஆனால், காட்சிகள் நகர நகர கதையின் பின்னணி புரியாமல் பலரும் குழம்பத் தொடங்கினர்.ஒருகட்டத்தில் திரையில் எதிர்பாராத காட்சிகள் தோன்றியதால் ரசிகர்களின் குழப்பம் மேலும் அதிகரித்தது. இதற்கிடையே இடைவேளை வந்தபோது, படத்தின் இறுதிக்கட்ட காட்சிகள் திரையில் ஓடியதுடன், தொடர்ந்து படத்தின் நிறைவுக் காட்சியும் இடம்பெற்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர். அப்போதுதான் திரையரங்கில் படம் தவறுதலாக தொடக்கப் பகுதியிலிருந்து அல்லாமல், இரண்டாம் பாதியில் இருந்து திரையிடப்பட்டிருப்பது தெரியவந்தது. அதாவது, கதையின் முக்கியமான திருப்பங்களும் இறுதிக்காட்சிகளும் முதலில் ரசிகர்களின் கண்முன்னே வந்துவிட்டன.இதனால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்க ஊழியர்களிடம் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

இரண்டாம் பாதியையே முதலில் பார்த்துவிட்ட நிலையில், மீண்டும் முதல் பாதியை திரையிடுவதால் படத்தின் சுவாரசியம் இல்லாமல் போய்விடும் என்று அவர்கள் தெரிவித்தனர்.இதையடுத்து, தாங்கள் செலுத்திய நுழைவுச்சீட்டு கட்டணத்தை முழுமையாக திருப்பி வழங்க வேண்டும் என்று ரசிகர்கள் வலியுறுத்தினர்.

மேலும், முன்பதிவு செய்ததற்காக செலுத்திய கூடுதல் கட்டணத்தையும் சேர்த்து திருப்பித் தர வேண்டும் என்று சிலர் கேட்டுக்கொண்டனர்.இதனால் ரசிகர்களுக்கும் திரையரங்க ஊழியர்களுக்கும் இடையே நீண்ட நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. இதன் காரணமாக திரையரங்க வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பான சூழல் நிலவியது. அடுத்த காட்சிக்கு வந்திருந்த பார்வையாளர்களும் இதனால் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

நிலைமையை சமாளிக்க திரையரங்க நிர்வாகம் உடனடியாக ரசிகர்களிடம் நடந்த தவறுக்கு வருத்தம் தெரிவித்தது. மேலும், பாதிக்கப்பட்ட பார்வையாளர்கள் செலுத்திய நுழைவுச்சீட்டு கட்டணம் முழுவதையும் திருப்பி வழங்கியது.பணம் திரும்பப் பெற்ற ரசிகர்கள், படத்தின் முதல் பகுதியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டதாகவும், தவறுதலாக இரண்டாம் பாதையும் இறுதிக்காட்சிகளும் முதலில் திரையிடப்பட்டதாகவும் தெரிவித்தனர். இந்த சம்பவத்தால் அந்த திரையரங்கில் ‘அன்பில் அவன்’ படத்தின் குறிப்பிட்ட காட்சி பாதியிலேயே முடிவுக்கு வந்தது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is climax first scene Confusion erupted theaters as second half film Anbil Avan screened first Salem


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->