அரும்பாக்கத்தில் அதிர்ச்சி சம்பவம்...! தெருவில் விளையாடிய 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி படுகாயம்....! - Seithipunal
Seithipunal


சென்னை அரும்பாக்கம் ரசாக் கார்டன் பகுதியில் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த 4 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.அரும்பாக்கத்தைச் சேர்ந்த தியாஸ் என்ற 4 வயது சிறுவன், நேற்று முன்தினம் நண்பர்களுடன் சேர்ந்து அப்பகுதி தெருவில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அப்போது சாலையோரத்தில் தரையில் வைக்கப்பட்டிருந்த மின்சாரப் பெட்டியின் மீது சிறுவனின் கை உரசியதாக தெரிகிறது.அடுத்த நொடியே எதிர்பாராதவிதமாக சிறுவனை மின்சாரம் தாக்கியது.

இதில் தியாஸின் இரு கைகளிலும் தீக்காயம் ஏற்பட்டது. மின்சார அதிர்ச்சியால் வலி தாங்க முடியாமல் சிறுவன் அலறித் துடித்தான்.சிறுவனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் உடனடியாக அங்கு விரைந்து வந்தனர்.

பின்னர் மின்சார தாக்குதலால் காயமடைந்த தியாஸை மீட்டு, சிகிச்சைக்காக எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.அங்கு சிறுவனுக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இதற்கிடையே சம்பவம் குறித்து தகவல் அறிந்த அரும்பாக்கம் காவலர்கள், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

சாலையோரத்தில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த மின்சாரப் பெட்டியால் சிறுவன் மின்சாரம் தாக்கி காயமடைந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking incident Arumbakkam 4 year old boy seriously injured after being electrocuted while playing street


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->