நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தின் நிர்வாகிகள் சந்திப்பு; 2000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்பு..!
Meeting of office bearers of the Actor Sivakarthikeyan Welfare Association
சென்னை போரூர் அருகே உள்ள பரணிபுத்தூர் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கம் சார்பில் நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்வில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த சிவகார்த்திகேயன் நற்பணி இயக்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் 2000 த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இந்த நிகழ்ச்சி நடைபெற்ற மண்டபம் வளாகம் முழுவதும் பல்வேறு பேனர்கள் வைத்து அலங்கரிக்கப்பட்டு இருந்தது. அத்துடன், இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உரிய அனுமதி சீட்டு வைத்திருப்போர் மட்டும் உள்ளே அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதனை தொடர்ந்து நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயன் புகைப்படம் எடுத்துக்கொண்டார். முன்னதாக நடிகர்கள் தனுஷ், சூர்யாவை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது ரசிகர்கள் மற்றும் நற்பணி சங்கத்தினர் சந்திப்பு நடந்துள்ளமை சினிமா வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.
English Summary
Meeting of office bearers of the Actor Sivakarthikeyan Welfare Association