இஸ்ரேலின் சுதந்திர தினச் விழாவில் சுடரை ஏற்றி வைக்க பிரதமர் மோடி மற்றும் கேப்டன் ஸ்மித் மச்சாருக்கு அழைப்பு விடுத்துள்ள இஸ்ரேல் பிரதமர்..!
Prime Minister Modi and Captain smit machchhar invited to attend Israels Independence Day celebrations
நடுவானில் துணை விமானியின் தீவிரவாத தாக்குதலில் இருந்து, தனது உயிரை பணயம் வைத்து, 174 பயணிகளை காப்பாற்ற படுகாயம் அடைந்த நிலையிலும், விமானத்தை பத்திரமாக தரையிறக்கிய இந்திய வம்சாவளி விமானி ஸ்மித் மச்சார் தற்போது நன்கு குணமடைந்து வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
கடந்த புதன்கிழமை (செப்.30) காலை 180 பயணிகளுடன், துபாயில் இருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கி ‘ஃபிளை துபாய்’ விமானம் புறப்பட்டது. இதில் 174 பயணிகளும், பைலட்டுகள் 2 பேர் உட்பட 06 ஊழியர்களும் பயணம் செய்தனர். இந்த விமானத்தை இந்திய வம்சாவளி பைலட் ஸ்மித் மச்சார் (39) இயக்கினார். அவருடன் ஓமன் நாட்டை சேர்ந்த துணை பைலட் பணியில் இருந்தார்.
திடீரென பைலட் அறையில் இருந்த கோடரியால் ஸ்மித் மச்சாரைத் துணை பைலட் தாக்கிய போது, நிலைகுலைந்த மச்சார், துணை பைலட்டை தீரத்துடன் எதிர்த்துப் போராடிதோடு, சரியான நேரத்தில் பைலட் அறையை திறந்து, சக பயணிகளின் துணையுடன் விமானத்தை பாதுகாப்பாக தரையிறக்கவும், பயணிகளின் உயிர் காக்கவும் உதவினார்.

தன் உயிரை பணயம் வைத்து விமான கடத்தல் முயற்சியை தடுத்து, 170க்கும் மேற்பட்டோரின் உயிரை காப்பாற்றிய பெருமை மிகு இந்திய விமானி ஸ்மித் மச்சாரை, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணை பிரதமர் ஷேக் ஹம்தான் மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்து பாராட்டினார். அத்துடன், அவருக்கு அணைத்து வகையிலும் உதவி புரிய கடமைப்பட்டுள்ளதாவும், அவரால் பெருமை கொள்வதாகவும் தெரிவித்தார்.
அத்துடன், கேப்டன் ஸ்மித் மச்சாரை நேரில் சந்தித்து நலம் விசாரித்த ஐக்கிய அரபு அமீரக துணை பிரதமர், விமானி மச்சார் உச்சபட்ச தீரத்தை வெளிப்படுத்தி, மனித உயிர்களை பொறுப்புடன் காத்ததற்கு நன்றியும் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இந்தியர்களுக்கு தங்களின் அன்பையும் நன்றியையும் வெளிப்படுத்தும் விதமாக, அடுத்தாண்டு மே மாதம் நடைபெற உள்ள இஸ்ரேல் சுதந்திர தின விழாவில், பிரதமர் மோடியும், விமானி ஸ்மித் மச்சாரும் பங்கேற்க வேண்டும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு அழைப்பு விடுத்துள்ளார்.
அப்போது இருவரும் தீபமேற்றி விழாவை தொடங்கிவைக்க வேண்டுமெனவும் கூறியுள்ளார்.
இந்நிலையில், விமானி ஸ்மித் மச்சார் சிறந்த மருத்துவக் கண்காணிப்பில் உள்ளதாகவும், அவர் குணமடைந்து வருவதாகவும் ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்க தொடர்பில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Prime Minister Modi and Captain smit machchhar invited to attend Israels Independence Day celebrations