தக்காளி ரூ.50, மாங்காய் ரூ.200, பீன்ஸ் ரூ.110 அதிகரிப்பால் மக்கள் அதிர்ச்சி; கேரட் விலை 20-ற்கு குறைவால் விவசாயிகள் கவலை..! - Seithipunal
Seithipunal


கடந்த வாரங்களில் பெய்த கனமழையால் வரத்து குறைந்துள்ள நிலையில், தருமபுரி மாவட்டத்தில் தக்காளி விலை கிலோவுக்கு 50 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஏற்கனவே ஒரு கூடை தக்காளி 900 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், தற்போது 1,200 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு கிலோ தக்காளி 34 ரூபாய்க்கு விற்பனையான நிலையில், 15 ரூபாய் உயர்ந்து 50 ரூபாய் வரை விற்பனையாகிறது.

அடுத்து, கோவையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மகசூல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். இதனால், 14 கிலோ எடை கொண்ட தக்காளி கூடை 500 ரூபாய்க்கு மேல் விற்பனையாகும் நிலையில், விலை அதிகரித்த போதிலும் மகசூல் பாதிக்கப்பட்டதால் தங்களுக்கு லாபம் இல்லை என அவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.

அதேப்போன்று, திருவாரூரில் பீன்ஸ், மாங்காய், அவரைக்காய், முருங்கைக்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை பன்மடங்கு உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிலோ மாங்காய் 200 ரூபாய்க்கும், பீன்ஸ் 110 ரூபாய்க்கும் விற்பனையாகிறது. விளைச்சல் குறைந்ததால் வரத்து சரிந்து விலை உயர்ந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி, அத்திமுகம், பேரிகை பகுதிகளில் கேரட் அறுவடை தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த மாதங்களில் கிலோ 30 முதல் 40 ரூபாய் வரை விற்ற கேரட், தற்போது 20 முதல் 25 ரூபாய் வரை மட்டுமே விற்பனையாகிறது. இவ்வாறு கேரட் விலை குறைவால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

People shocked as tomato prices rise to Rs 50 per kg and raw mango prices to Rs 200


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->