சென்னை மணலியில் சோகம்; பணியில் இருந்தபோது மாரடைப்பு; பிறந்தநாளில் உயிரிழந்த தீயணைப்பு வீரர்..!
Firefighter dies of a heart attack while on duty in Manali on his birthday
சென்னை மணலி தீயணைப்பு நிலைய டிரைவர் பிறந்தநாளில் பணியில் இருந்த நிலையில், மாரடைப்பால் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிவா (வயது 35) இவர் மணலி தீயணைப்பு நிலையத்தில் டிரைவராகவும், மெக்கானிகாகவும் பணியாற்றி வந்துள்ளார். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு அனுசுயா என்ற பெண்னை காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில், இவர்களுக்கு மகிழிசை (08) எழில் ஆதிரா (06) இரு மகள்கள் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று இரவு சிவா பணிக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு தீடீரென நெஞ்சுவலி ஏற்பட்டு வலியில் துடித்துள்ளார். இதனை பார்த்த உடன் வேலை பார்க்கும் தீயணைப்பு வீரர்கள் அவரை உடனடியாக தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.
அதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஆனால், தீயணைப்பு வீரர் சிவாவை பரிசோதித்த டாக்டர் அவர் வரும் வழியில் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து சிவாவின் உடலை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து மணலி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிறந்தநாள் கொண்டாட்டத்தில் இருந்த நிலையில் மாரடைப்பால் தீயணைப்பு வீரர் சிவா உயிரிழந்து அவரது குடும்பத்தினர், மற்றும் நண்பர்களுக்கு அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம், வேப்பூர் அரியநாச்சியை சேர்ந்த சிவா கடந்த 2013 ஆம் ஆண்டு தீயணைப்பு துறையில் பணியில் சேர்ந்து பணியாற்றி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
English Summary
Firefighter dies of a heart attack while on duty in Manali on his birthday