மதுராந்தகம் இடைத்தேர்தல்: இன்று முதல் 03 நாட்களுக்கு செங்கல்பட்டு மாவட்டத்தில் 118 டாஸ்மாக் கடைகள் மூடல்..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நாளை மறுநாள் 06-ஆம் தேதி, மதுராந்தகம், தாராபுரம் ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறவுள்ளன. அதன்படி, மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு அமைதியான முறையில் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் 118 அரசு மதுபானக் கடைகளை 03 நாட்களுக்கு மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

மதுராந்தகம் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு, 06 -ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனால், சட்டம் - ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. தேர்தல் பணிகளை அமைதியான சூழலில் நடத்துவதற்காக, அக்டோபர் 04-ஆம் தேதியான இன்று முதல் அக்டோபர் 06-ஆம் தேதி வரை தொடர்ந்து மூன்று நாட்களுக்கு டாஸ்மாக் கடைகளை மூட மாவட்ட தேர்தல் நடத்தும் அதிகாரி உத்தரவிட்டுள்ளார்.

அதன்படி, செங்கல்பட்டு மாவட்டத்தில் (பிரிக்கப்படாத பழைய காஞ்சிபுரம் மாவட்டம்) தெற்கு மண்டலத்திற்கு உட்பட்ட 62 கடைகளும், வடக்கு மண்டலத்திற்கு உட்பட்ட 56 கடைகளும் என மொத்தம் 118 அரசு மதுபானக் கடைகள் மூடப்பட்டுள்ளன.

நேற்று இரவு வியாபாரம் முடிந்தவுடன் இந்தக் கடைகள் அனைத்தும் இழுத்து மூடப்பட்டு, அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதனைத் தொடர்ந்து, கடைகளின் சாவிகள் அந்தந்த மண்டல அதிகாரிகளிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான அக்டோபர் 09-ஆம் தேதியும் (09.10.2026) இந்த 118 மதுபானக் கடைகளுக்கும் விடுமுறை அளித்து, முழுமையாக மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

In view of the Maduranthakam byelection 118 TASMAC shops in Chengalpattu district will remain closed for three days starting today


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->