திருத்தணி முருகன் கோயிலில் சோகம்; சாமி தரிசனம் செய்வதற்கு நின்ற பக்தர்கள் மீது சிலை உடைந்து விழுந்து விபத்து; 3 பெண் உட்பட 4 பேர் படுகாயம்...! - Seithipunal
Seithipunal


முருகப்பெருமானின் ஐந்தாம் படை வீடாக விளங்கும் திருத்தணி முருகன் கோயிலில், சிலை உடைந்து விழுந்து 03 பெண்கள் உட்பட 04 பேர் படுகாயமடைந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவிலின் பொதுவழியில் சாமி தரிசனம் செய்ய நின்றபோது காளி கோபுரத்திலிருந்து சிலை உடைந்து விழுந்து இந்த விபத்து நடந்துள்ளது. காயமடைந்தவர்கள் அனைவரும் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வார விடுமுறை நாளான இன்று காலை ஏராளமான பக்தர்கள் மலைக்கோயிலில் குவிந்து பொதுவழியில் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். இதனிடையே, இன்று காலை 07 மணி அளவில் பொதுவரிசையில் சாமி தரிசனம் செய்ய ஏராளமான பக்தர்கள் காத்திருந்துள்ளனர். 

அப்போது, கோயில் உள் பிரகாரத்தில் காளி கோபுரம் பகுதியில் பக்தர்கள் நின்றிருந்தபோது கோபுரத்தில் உள்ள யாழி சிலையின் தலைப்பகுதி திடீரென உடைந்து பக்தர்கள் மீது விழுந்துள்ளது. இதில், 03 பெண் பக்தர்கள் உட்பட 04 பேர் படுகாயமடைந்தனர். இதனால் சாமி தரிசனம் செய்ய வந்த பக்தர்கள் அதிர்ச்சிடைந்து  ஓடியுள்ளனர்.

உடனடியாக 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு, படுகாயமடைந்த பக்தர்களை திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் திருத்தணி போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். 

அந்த வகையில் இந்த விபத்தில் தர்மபுரியை சேர்ந்த லட்சுமி (60), ஜெயா (65), ஆந்திர மாநிலம் திருப்பதியை சேர்ந்த சாவித்திரி (55), மணிகண்டன் (30) என்பதும், தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதும் தெரிய வந்தது. சாமி தரிசனம் செய்ய பொதுவழியில் நின்றிருந்த பக்தர்கள் மீது கோபுர சிலை உடைந்து விழுந்து படுகாயமடைந்த சம்பவம் பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Four devotees sustained severe injuries after a statue collapsed and fell on them while they were waiting for darshan at the Thiruttani Murugan Temple


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



சினிமா

Seithipunal
--> -->