கார் ரேசிங் மட்டுமல்ல... கிரிக்கெட்டிலும் மாஸ் காட்டும் AK: விக்கெட் கீப்பிங், பேட்டிங் வீடியோ இணையத்தில் வைரல்!
Beyond Racing Tracks Actor Ajith Kumar Showcases Cricket Skills Viral Video Sweeps Internet
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச கார் பந்தய வீரருமான நடிகர் அஜித்குமார், தற்போது கிரிக்கெட் விளையாடும் புதிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி அஜித்தின் ரசிகர்களால் மிகத் தீவிரமாக வைரலாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் தான் ஒரு பந்தய வீரர் மட்டுமல்ல, கிரிக்கெட்டிலும் ஆல்-ரவுண்டர் என்பதை அவர் நிரூபித்துள்ளார்.
வைரல் வீடியோவின் பின்னணி:
அண்மையில் வெளிநாட்டில் நடைபெற்ற கார் பந்தயங்களில் பங்கேற்றுவிட்டு, தமிழக சட்டசபை தேர்தலில் தனது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றச் சென்னை திரும்பிய அஜித், தற்போது குடும்பத்துடன் முழு ஓய்வில் இருந்து வருகிறார்.
ஆல்-ரவுண்டர் அஜித்: தற்போது வெளியாகியுள்ள வீடியோவில், நடிகர் அஜித் மைதானத்தில் விக்கெட் கீப்பராகவும், பின்னர் பேட்ஸ்மேனாகவும் மாறி அதிரடியாகப் பேட்டிங் செய்யும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. மிரட்டலான பவுலிங், சிக்ஸ் ஹிட்டிங் என அவர் காட்டும் சுறுசுறுப்பைக் கண்டு "கார் ரேஸ் மட்டுமல்ல, நம்ம தல கிரிக்கெட்டிலும் கிங் தான்" என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொண்டாடி வருகின்றனர்.
சினிமா மற்றும் வணிகக் களத்தில் புதிய பாய்ச்சல்:
சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான 'குட் பேட் அக்லி' திரைப்படத்தைத் தொடர்ந்து, மீண்டும் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ஒரு புதிய திரைப்படத்தில் அஜித் நடிக்க உள்ளதாகத் கோலிவுட் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
தயாரிப்பாளராக அவதாரம்: திரைத்துறை மற்றும் விளையாட்டுத் துறையைத் தாண்டி, அஜித் தற்போது புதிய தொழில்முனைவோராகவும் மாறியுள்ளார். 'அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ் எல்.எல்.சி.' (Ajith Kumar Sports Service LLC) என்ற பெயரில் தனது புதிய தயாரிப்பு மற்றும் விளையாட்டு நிறுவனத்தைத் தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் (Film Chamber) அதிகாரப்பூர்வமாகப் பதிவு செய்து அடுத்தகட்ட பாய்ச்சலுக்குத் தயாராகியுள்ளார்.
குடும்பத்துடன் கொண்டாட்டம்:
தேர்தல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, தனது திருமண நாள் மற்றும் பிறந்தநாளைத் தனது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோருடன் இணைந்து அஜித் கொண்டாடிய க்யூட்டான வீடியோக்களும், புகைப்படங்களும் ஏற்கனவே இணையத்தில் ட்ரெண்டாகி வந்த நிலையில், தற்போது இந்த கிரிக்கெட் வீடியோவும் இணைந்து ரசிகர்களுக்கு இரட்டைக் கொண்டாட்டமாக அமைந்துள்ளது.
English Summary
Beyond Racing Tracks Actor Ajith Kumar Showcases Cricket Skills Viral Video Sweeps Internet