சான்றிதலுக்காக வெட்டிங்; ஜனநாயகன் சீக்கிரம் ரிலீஸ் ஆகும்; தயாரிப்பாளர் பதில்..! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வராக முன் விஜய் நடிப்பில் ஹெச் வினோத் இயக்கியுள்ள படம் 'ஜனநாயகன்'. இந்த படத்தில் பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, ப்ரியாமணி, பிரகாஷ்ராஜ் எனப் பலரும் நடித்துள்ளனர். இப்படத்துக்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படம் 2026 பொங்கல் வெளியீடாக இந்த படம் வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில் தணிக்கை சான்றிதழ் வழங்காத காரணத்தினால், படம் ரிலீஸ் ஆகவில்லை.

மீண்டும் சான்றிதழ் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு தற்போது வரை படம் வெளியீடு பற்றிய தகவல் எதுவும் இல்லாமல் முடங்கியுள்ளது. தற்போது நடிகர் விஜய் தமிழக முதலமைச்சர் ஆகியுள்ள நிலையில், 'ஐன நாயகன்' படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இந்நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா  இன்று திருச்செந்தூர் சாமி தரிசனத்துக்கு சென்றார். அங்கு செய்தியாளர்கள் ஜனநாயகன் வெளியீடு குறித்து கேள்வி எழுப்பினர். அப்போது அவர் பதிலளித்துள்ளதாவது;

''நாங்கள் சான்றிதழ் வருவதற்காக காத்திருக்கிறோம். சீக்கிரமே அது வந்துவிடும் என நம்புகிறோம். கிடைத்த உடன் ரிலீஸ் தேதியை அறிவிப்போம். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வெளியிடுவோம்" என்று கூறியுள்ளார்.

தமிழில் விஜயின் 'ஜனநாயகன்' படத்தின் மூலம் அறிமுகமாகும் KVN, மலையாளத்தில் 'Manjummel Boys' பட இயக்குநரின் அடுத்த படமான 'பாலன்', தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் 'Mega158' மற்றும் இந்தியில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் சைஃப் அலிகான், அக்ஷய்குமார் நடித்துள்ள 'Haiwaan' ஆகிய படங்களின் மூலம் அறிமுகமாக உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Producer Responds Regarding Jana Nayagan Release


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->