மேற்கு வங்கம், அசாம் இடைத்தேர்தலில் பாஜக முன்னணி!
BJP Leads in West Bengal Nandigram Bypoll Assams Nagaon Lok Sabha Seat
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன் சேர்த்து, அக்டோபர் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்ற மேற்கு வங்கத்தின் நந்திகிராம் சட்டமன்றத் தொகுதி மற்றும் அசாமின் நாகோன் மக்களவைத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கையிலும் பாஜக வேட்பாளர்கள் பெரும் வாக்கு வித்தியாசத்தில் முன்னணி வகித்து வருகின்றனர்.
மேற்கு வங்கம் - நந்திகிராம் தொகுதி நிலவரம்:
முதலமைச்சர் சுவேந்து அதிகாரி ராஜினாமா செய்த நந்திகிராம் தொகுதியில், பாஜக வேட்பாளர் ஹசிராணி ராத் (சுட்டுக்கொல்லப்பட்ட கட்சி நிர்வாகி சந்திரநாத் ரத்தின் தாயார்) தொடர்ந்து முன்னணி வகித்து வருகிறார்.
11 மணி நிலவரப்படி, ஹசிராணி ராத் 24,000-க்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று, 19,600-க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.
திரிணாமுல் காங்கிரஸ் ஆதரவு பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் மிலன் பிரதான் 4,300 வாக்குகளுடன் இரண்டாம் இடத்தில் பின்தங்கியுள்ளார்.
அசாம் - நாகோன் மக்களவைத் தொகுதி நிலவரம்:
காங்கிரஸிலிருந்து விலகி பாஜகவில் இணைந்து வெற்றி பெற்ற பிரத்யுத் போர்டோலாய் ராஜினாமா செய்ததால் காலியான நாகோன் மக்களவைத் தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
பாஜக வேட்பாளர் தேவாசிஷ் சர்மா 1.1 லட்சத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று, சுமார் 57,000 வாக்குகள் வித்தியாசத்தில் வலுவான முன்னிலையில் உள்ளார்.
AIUDF கட்சியின் தலைவர் பத்ருதீன் அஜ்மல் 52,000 வாக்குகளுடன் 2-ஆம் இடத்திலும், காங்கிரஸ் வேட்பாளர் சிபாமோனி போரா 16,000 வாக்குகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளனர்.
English Summary
BJP Leads in West Bengal Nandigram Bypoll Assams Nagaon Lok Sabha Seat