"தட்டாஞ்சாவடியில் காங்கிரஸ்+தவெக தோல்வி, திமுக படுதோல்வி! மாஸ் காட்டிய என்.ஆர்.காங்கிரஸ் அபார வெற்றி!
AINRCs Ashok Anand Wins Puducherry Thattanchavady By-Election by 8482 VotesDefeats Congress-TVK Supported Candidate
புதுச்சேரி தட்டாஞ்சாவடி சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் அசோக் ஆனந்த் 8,482 வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றுள்ளார்.
வாக்கு எண்ணிக்கை இறுதி விவரம்:
அசோக் ஆனந்த் (என்.ஆர்.காங்கிரஸ்): 13,358 வாக்குகள் (வெற்றி)
இ. விநாயகன் (காங்கிரஸ் - தவெக ஆதரவு): 4,876 வாக்குகள் (இரண்டாம் இடம்)
கே. சேது என்ற சேதுசெல்வம் (திமுக): 2,664 வாக்குகள் (மூன்றாம் இடம்)
தொகுதியைத் தக்கவைத்த என்.ஆர்.காங்கிரஸ்: புதுச்சேரி முதலமைச்சர் என். ரங்கசாமி கடந்த பொதுத்தேர்தலில் மங்கலம் மற்றும் தட்டாஞ்சாவடி ஆகிய இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று, பின்னர் தட்டாஞ்சாவடி தொகுதியை ராஜினாமா செய்தார். தற்போது நடைபெற்று முடிந்துள்ள இடைத்தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸ் தனது கோட்டையை மீண்டும் தக்கவைத்துக் கொண்டுள்ளது.
காங்கிரஸ் - தவெக கூட்டணிப் பிரச்சாரத்திற்குப் பின்னடைவு: இத்தேர்தலில் தவெக தலைவர் விஜய்யின் படங்களை ஏந்தி காங்கிரஸ் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டபோதிலும், காங்கிரஸ் வேட்பாளர் பெரும் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளார்.
திமுக 3-ஆம் இடம்: இந்தியா கூட்டணியில் விரிசல் ஏற்பட்டுத் தனித்து களம் கண்ட திமுகவின் வேட்பாளர் சேதுசெல்வம் 2,664 வாக்குகளுடன் 3-ஆம் இடத்தைப் பிடித்துள்ளார்.
English Summary
AINRCs Ashok Anand Wins Puducherry Thattanchavady By-Election by 8482 VotesDefeats Congress-TVK Supported Candidate