“உன் படிப்பு செலவு முழுவதையும் நானே ஏற்கிறேன்!” – பெற்றோரை இழந்த சிறுவனுக்கு KPY பாலா செய்த உதவி! - Seithipunal
Seithipunal


‘கலக்கப்போவது யாரு’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான பாலா, ரசிகர்களால் KPY பாலா என்று அழைக்கப்படுகிறார். சின்னத்திரையில் தனது பயணத்தை தொடங்கி, பின்னர் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி தனக்கென தனி ரசிகர்கள் வட்டத்தை உருவாக்கிய அவர், தற்போது வெள்ளித்திரையிலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இந்நிலையில், அவர் செய்துள்ள ஒரு உதவி பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் தனது டைமிங் காமெடி மூலம் ரசிகர்களை கவர்ந்த பாலா, அதன்பிறகு சினிமாவிலும் கவனம் செலுத்தத் தொடங்கினார். ‘ஜுங்கா’ உள்ளிட்ட படங்களில் நடித்த அவர், தற்போது ‘காந்தி கண்ணாடி’ திரைப்படத்தின் மூலம் ஹீரோவாகவும் அறிமுகமானார். இப்படத்தில் பாலாஜி சக்திவேல் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். பாலா முதன்முறையாக கதாநாயகனாக நடித்த படம் என்பதால், ரசிகர்கள் மத்தியில் படத்திற்கு எதிர்பார்ப்பு இருந்தது.

சின்னத்திரை மற்றும் சினிமா மூலம் தான் சம்பாதிக்கும் பணத்தில் ஒரு பகுதியை தொடர்ந்து ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக செலவிட்டு வருகிறார் பாலா. ஆம்புலன்ஸ் வழங்குவது, இருசக்கர வாகனம் வாங்கிக் கொடுப்பது, கல்வி மற்றும் மருத்துவ உதவிகள் செய்வது என பல்வேறு வழிகளில் அவர் உதவி செய்து வருவதாக கூறப்படுகிறது. தான் சம்பாதிக்கும் பணத்தை தொடர்ந்து பிறருக்கு உதவுவதற்கும் பயன்படுத்துவேன் என்றும் பாலா ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இதற்கிடையே, பாலா செய்யும் உதவிகள் தொடர்பாக சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்திருந்தனர். அவரது உதவிகள் உண்மையானவை அல்ல என்றும் சிலர் குற்றம்சாட்டினர். இதற்கு பதிலளித்த பாலா, “நான் சர்வதேச கைக்கூலி இல்லை; தினக்கூலி” என்று நகைச்சுவையாக கூறியிருந்தார்.

இந்த சூழலில், பெற்றோரை இழந்து படிப்பைத் தொடர முடியாமல் சிரமப்படும் சிறுவன் குறித்து வெளியான செய்தி பாலாவின் கவனத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. அந்தச் சிறுவனை நேரில் வரவழைத்த பாலா, அவனிடம் ஆறுதல் கூறியதுடன், அவனது கல்விச் செலவு முழுவதையும் தான் ஏற்றுக்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

மேலும், சிறுவனின் தந்தையை தகனம் செய்வதற்காக வாங்கியிருந்த கடனை அடைத்துக்கொள்ளும்படியும் கூறி ஒரு தொகையை பாலா வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் அந்தச் சிறுவனின் குடும்பத்துக்கு ஏற்பட்டிருந்த பொருளாதார சுமையில் ஒரு பகுதி குறைந்துள்ளது.

இதோடு நிற்காமல், தற்போது தான் ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருப்பதாகவும், அந்தப் படத்தின் மூலம் கிடைக்கும் சம்பளத்தை வைத்து சிறுவனுக்கு ஒரு வீடு கட்டிக் கொடுக்க இருப்பதாகவும் பாலா உறுதியளித்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலாவின் இந்த உதவி தொடர்பான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது. சினிமாவில் கிடைக்கும் வருமானத்தை பிறருக்காகவும் பயன்படுத்த வேண்டும் என்ற தனது அணுகுமுறையை மீண்டும் ஒரு முறை அவர் செயல்படுத்தியிருப்பதாக அவரது ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I will bear the entire cost of your education The help KPY Bala extended to a boy who lost his parents


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?


செய்திகள்



Seithipunal
--> -->