வேகமே விலாசம்: அபுதாபி பந்தயத்தில் அஜித்… நேரில் வாழ்த்திய சிவகார்த்திகேயன்...!
Ajith Abu Dhabi race Sivakarthikeyan congratulated him person
திரை உலகில் ‘தல’ என ரசிகர்கள் கொண்டாடும் நடிகர் அஜித் குமார், சினிமா வெற்றிகளைத் தாண்டி வேகத்தின் உலகில் தனது தனி அடையாளத்தை பதித்து வருகிறார். கார் ரேஸிங் மீது கொண்டுள்ள ஆழமான காதல் அவரை சர்வதேச பந்தயப் பாதைகளில் தைரியமாக களம் இறங்கச் செய்துள்ளது.

சமீப காலமாக ஸ்பெயின் மற்றும் அபுதாபி போன்ற உலகத் தரம் வாய்ந்த மேடைகளில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று, ஒரு நடிகராக மட்டுமல்லாது ஒரு திறமையான ரேசராகவும் கவனம் குவித்து வருகிறார்.
அபுதாபி ரேஸிங் அரங்கமே தற்போது அஜித்தை காண ரசிகர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் கூடும் சந்திப்புக் களமாக மாறியுள்ளது. அவரை நேரில் வாழ்த்த இசையமைப்பாளர்கள் அனிருத், ஜி.வி. பிரகாஷ், நடிகைகள் நயன்தாரா, ஸ்ரீலீலா உள்ளிட்ட பலர் நேரடியாகச் சென்று உற்சாகப்படுத்தினர்.
இந்த வரிசையில், யாஸ் மரினா சர்க்யூட்டில் நடிகர் சிவகார்த்திகேயனும் அஜித்தை சந்தித்து பாராட்டினார். அந்த சந்திப்பு புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் மின்னல் வேகத்தில் பரவி, ரசிகர்களிடையே பெரும் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
திரையில் ஹீரோவாக ஜொலிக்கும் அஜித், ரேஸிங் ட்ராக்கிலும் அதே வேகத்தில் சாதனை படைத்து வருவது ரசிகர்களை மேலும் பெருமைப்பட வைத்துள்ளது.
English Summary
Ajith Abu Dhabi race Sivakarthikeyan congratulated him person