மறைந்த இயக்குநர் பாக்யராஜ் உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தி குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய முதல்வர் விஜய்..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் ஜாம்பவான், 'திரைக்கதை மன்னன்' இயக்குநர் கே. பாக்யராஜ் இன்று காலமாகியுள்ள நிலையில் அவரது உடலுக்கு தமிழக முதல்வர் விஜய் நேரில் சென்று, அவரின் உடலுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தியுள்ளதோடு,பாக்யராஜின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.

இன்று தனது 73 வயதில் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மாரடைப்பு ஏற்பட்டு இயக்குநர் பாக்யராஜின் உயிரிழந்துள்ளமை தமிழ்த் திரையுலகத்தை சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பாக்யராஜ் உடலுக்கு திரை உலகத்தினர் மற்றும் அரசியல் தலைவர்கள் ரசிகர்கள் என பெருந்திரளாக திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட மூத்த தலைவர்கள், பாக்யராஜ் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர். இதைத் தொடர்ந்து, தமிழக முதல்வர் விஜய், பாக்யராஜின் நுங்கம்பாக்கம் இல்லத்துக்கு சென்று அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அதோடு, பாக்யராஜின் மகன் சாந்தனுவை ஆரத் தழுவி ஆறுதல் கூறியதோடு, குடும்பத்தினருக்கும் அவர் ஆறுதல் தெரிவித்துள்ளார்.

திரைத்துறையில் கே.பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அவரது இரங்கல் செய்தியில் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Chief Minister Vijay paid his respects to the late director Bhagyaraj in person


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->