கிராமத்து மண் மணக்கும் சுதந்திர தினம்... மக்களுடன் மக்களாக களமிறங்கிய சிவகார்த்திகேயன்...! - Seithipunal
Seithipunal


‘சேயோன்’ திரைப்படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மதுரை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் அப்பகுதி கிராம மக்கள் மற்றும் மாணவர்களுடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்து வருகின்றன.‘அமரன்’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அடுத்த திரைப்படமாக ‘சேயோன்’ உருவாகி வருகிறது.

‘தாய் கிழவி’ திரைப்படத்தின் மூலகவனம் பெற்ற சிவகுமார் முருகேசன் இப்படத்தை இயக்கி வருகிறார்.மதுரை மண்ணின் இயல்பையும், கிராமத்து வாழ்க்கை முறையையும் மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. அதிரடி காட்சிகள், குடும்ப உணர்வுகள் மற்றும் நகைச்சுவை கலந்த விறுவிறுப்பான பொழுதுபோக்கு திரைப்படமாக ‘சேயோன்’ தயாராகி வருகிறது.படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.

பிரபல தெலுங்கு நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ், சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். கடந்த ஜூன் மாதம் படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில், கன்னட நடிகரும் இயக்குநருமான ராஜ் பி. ஷெட்டியும் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார்.

முதல்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்ததைத் தொடர்ந்து, ‘சேயோன்’ படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தற்போது மதுரையில் மீண்டும் தொடங்கியுள்ளது. மதுரையைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களில் பிரமாண்டமான படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்பட்டு, முக்கியமான சண்டைக் காட்சிகள் மற்றும் குடும்ப பின்னணியிலான காட்சிகள் தொடர்ந்து படமாக்கப்பட்டு வருகின்றன.

மேலும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இப்படத்தின் படப்பிடிப்பில் இணைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.படப்பிடிப்புக்காக மதுரை அருகே முகாமிட்டுள்ள சிவகார்த்திகேயன், அப்பகுதி கிராமத்தில் மாணவர்கள் மற்றும் பொதுமக்களுடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியுள்ளார்.

தேசியக் கொடியை ஏற்றிய நிகழ்வில் அவர் பங்கேற்றதுடன், கிராம மக்களுடன் கலந்துரையாடியும் நேரத்தை செலவிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.திரையுலக நட்சத்திரம் தங்களுடன் இணைந்து சுதந்திர தினத்தை கொண்டாடியதை அப்பகுதி மக்கள் உற்சாகத்துடன் வரவேற்றனர்.

இந்த நிகழ்வின் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன.விறுவிறுப்பாக நடைபெற்று வரும் ‘சேயோன்’ திரைப்படம் வரும் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Independence Day that smells village soil Sivakarthikeyan who took field people


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->