தமிழ் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' இயக்குநர் கே.பாக்யராஜ் காலமானார்; அதிர்ச்சியில் தமிழ் திரையுலகம்..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் 'திரைக்கதை மன்னன்' இயக்குநர் மற்றும் பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் (73) காலமாகியுள்ளார். உடல்நிலை மோசமான நிலையில் சென்னை கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அவரது மறைவு ஒட்டு மொத்த தமிழ் திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்போது அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

கே.பாக்கியராஜ்

1953 ஜனவரி 07-ஆம் தேதி ஈரோடு மாவட்டம் வெள்ளகோவிலில் பிறந்தவர். அண்மையில் மறைந்த இயக்குநர் இமையம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக தனது திரைப்பயணத்தைத் தொடங்கினார். பின்னர் 'சுவர் இல்லாத சித்திரங்கள்' திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான அவர் 'அந்த 7 நாட்கள்', 'முந்தானை முடிச்சு' உள்ளிட்ட பல வெற்றித் திரைப்படங்களைக் கொடுத்த்தவர்.

நகைச்சுவை மற்றும் உணர்வுப்பூர்வமான திரைக்கதைகளால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு முத்திரையைப் பதித்தவர்.

தீவிர சினிமாவில் இருந்து ஒதுங்கவில்லை என்றாலும் அவ்வப்போது சில படங்களில் நடித்து வந்தார். அண்மையில் பாக்யராஜ் சினிமாவுக்கு வந்து 50 ஆண்டுகள் முடிந்தது கொண்டாடப்பட்டது. 

அவரது மறைவு செய்தி வெளியாகியதைத் தொடர்ந்து திரைப்பட இயக்குநர்கள், நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் திரையுலக ரசிகர்கள் பலரும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்திய திரைப்பட உலகிற்கு அவர் ஆற்றிய பங்களிப்பை நினைவுகூர்ந்த திரையுலகினர், அவரது திரைக்கதைகள் என்றும் காலத்தால் அழியாத படைப்புகளாக நிலைத்திருக்கும் எனக் குறிப்பிட்டுள்ளனர்.

கே. பாக்கியராஜின் மறைவால், தமிழ் சினிமா திறமையான ஒரு கதைசொல்லியையும், இந்திய திரைப்பட உலகம் மறக்க முடியாத ஒரு திரைக்கதை ஆசிரியரையும் இழந்துள்ளது. அவரது படைப்புகளும், திரைக்கதை மரபும் வருங்கால திரைப்பட கலைஞர்களுக்கு தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்பதில் ஐயமில்லை.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil film industry director K Bhagyaraj passes away


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->