ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளேன்.. மறைத்து வைத்த ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால் - Seithipunal
Seithipunal


சென்னை: நடிகர் விஷ்ணு விஷால், கடந்த 3 முதல் 4 ஆண்டுகளாக ஆட்டோ இம்யூன் (Autoimmune) நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது 'கட்டா குஸ்தி 2' படத்தின் விளம்பரப் பணிகளில் பிஸியாக இருக்கும் நிலையில், தனது உடல்நிலை குறித்து சமூக வலைதளத்தில் அவர் மனம் திறந்து பதிவு வெளியிட்டுள்ளார்.

வித்தியாசமான கதைகளைத் தேர்வு செய்து நடித்து வரும் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் வரும் ஜூலை 3-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், சமீப காலமாக அவரது முகத்தில் சோர்வு காணப்படுவதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்திருந்தனர்.

இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள விஷ்ணு விஷால், "என் மீது அன்பும் அக்கறையும் காட்டிய அனைவருக்கும் மனமார்ந்த நன்றி. சமீபத்திய பதிவுகளில் நீங்கள் கூறிய கருத்துகள் என்னை மிகவும் நெகிழச் செய்தன. அதனால்தான் இந்த விஷயத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்," என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "கடந்த 3-4 ஆண்டுகளாக நான் ஆட்டோ இம்யூன் நோயால் பாதிக்கப்பட்டு வருகிறேன். அதற்காக மருத்துவர்கள் பரிந்துரைத்த மருந்துகளை தொடர்ந்து எடுத்துக் கொண்டு வருகிறேன். அந்த மருந்துகளின் பக்கவிளைவுதான் என் முகத்தில் காணப்படும் சோர்வு. இருப்பினும், இந்த சிகிச்சை என் உடல்நலத்திற்கு மிகவும் அவசியமானது," என்று தெரிவித்துள்ளார்.

ரசிகர்களின் அன்பும் ஆதரவும், தனது பணியின் மீது உள்ள நம்பிக்கையும், 'கட்டா குஸ்தி 2' படத்திற்காக உழைத்த படக்குழுவினரிடம் உள்ள பொறுப்புணர்வும் தன்னை தொடர்ந்து முன்னேறச் செய்வதாகவும் விஷ்ணு விஷால் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

நடிகரின் இந்த வெளிப்படையான பதிவு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பலரும் அவருக்கு விரைவில் முழு நலம் கிடைக்க வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

I am suffering from an autoimmune disease Vishnu Vishal reveals a long kept secret


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->