அரசுப் பள்ளியில் இது என்ன கொடுமை...? - சாதி அடையாள அட்டை விவகாரத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு அதிரடி கேள்வி...! - Seithipunal
Seithipunal


அமைச்சர் செங்கோட்டையன், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருப்பது தமிழ்நாடு அரசியல் அரங்கில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.

இந்த சூழலில், “அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டிய அவசியம் என்ன?” என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,"அரசுப் பள்ளி மாணவர்களுக்கு சாதி அடையாளத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்குவது தொடர்பாக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் வெளியிட்டுள்ள கருத்து பல்வேறு சந்தேகங்களையும் சர்ச்சைகளையும் உருவாக்கியுள்ளது.

அமைச்சரின் இந்த கருத்தின் பின்னணியில் உள்ள உண்மையான நோக்கம் என்ன? இது தமிழக அரசின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடா? மாணவர்களிடையே சாதி அடையாளத்தை ஆழமாக பதியச் செய்யும் வகையிலான இந்த முயற்சி சமூக நல்லிணக்கத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தாதா? இந்த அறிவிப்பால் தமிழ்நாட்டு மக்களிடையே பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

அந்த சந்தேகங்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் உடனடியாக தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

kind cruelty this government school Minister Thangam thennarasu sharp question caste identity card issue


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->