அந்தப் பதவிக்கு அவர் எப்படி...? - டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனம் குறித்து கனிமொழி எழுப்பிய விவாதம்...! - Seithipunal
Seithipunal


தவெக அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி நியமனத்தை கடுமையாக விமர்சித்துள்ள தி.மு.க. துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, தமிழ்நாட்டின் உரிமைகள் தொடர்பாக முக்கியமான கேள்விகளை முன்வைத்துள்ளார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,"இந்த விவகாரத்தில் தவிர்க்க முடியாத இரண்டு முக்கியமான கேள்விகள் எழுகின்றன.

தமிழ்நாட்டின் உரிமைகள், நலன்கள் மற்றும் குரலை டெல்லியில் உறுதியுடன் ஒலிக்கச் செய்ய வேண்டிய மிக முக்கியமான பொறுப்பில், அமைச்சர் பதவிக்கு இணையான இடத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த ஒருவரை தவெக அரசு அமர்த்தியுள்ளது.

இந்த பொறுப்பை ஏற்க தமிழ்நாட்டைச் சேர்ந்த தகுதியான ஒருவர் கூட தவெகவில் இல்லையா என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது.மேலும், மேகதாது அணை விவகாரம் போன்ற தமிழ்நாட்டின் உரிமை சார்ந்த முக்கிய பிரச்சினைகளில், தற்போது நியமிக்கப்பட்டுள்ள நபர் உண்மையாக தமிழ்நாட்டின் நலன்களை முன்னிறுத்தி செயல்படுவாரா?

அல்லது தனது சொந்த மாநிலமான கர்நாடகாவின் நலன்களுக்காகவே குரல் கொடுப்பாரா? தமிழக மக்களின் மனதில் எழுந்துள்ள இந்த சந்தேகங்களுக்கு தவெக அரசு தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்” என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

How did he get that position Kanimozhi discussion appointment Delhi Special Representative


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->