குறைந்த விலைக்கு தங்​கம் வாங்கி கொடுப்​ப​தாக பலரை ஏமாற்றியதாக குற்றசாட்டு; 'கோல்டு மேன்' சூரியபாபு மீது தெலங்கானா போலீஸ் வழக்கு..! - Seithipunal
Seithipunal


ஹைத​ரா​பாத் பாத்​த​பஸ்தி பகு​தியை சேர்ந்​தவர் சூரியகு​மார். இவர் கிலோ கணக்​கில் தங்க ஆபரணங்​களை அணிந்து உலா வந்து அனைவரையும் கவனத்தை ஈர்த்தவர்.

இதனால் இவரை 'கோல்டு மேன்' மற்றும் 'சூரிய ​பாபு' என்​றும் மக்கள் அழைகின்றனர். இந்நிலையில், இவர் குறைந்த விலைக்கே தங்​கம் வாங்கி கொடுப்​ப​தாக பலரிடம் பணம் வாங்கி ஏமாற்றி விட்டதாக சிலர் ஹைத​ரா​பாத் நாராயண கூடா போலீஸ் நிலையத்​தில் நேற்று புகார் அளித்துள்ளனர்.

அந்த புகார் மனுவில், தங்​கம் வாங்கி கொடுக்காத காரணத்​தி​னால் பணத்தை திருப்பி தர வேண்​டும் என கேட்​டதற்கு சில நாட்​களுக்கு முன் ரூ.20 லட்​சத்துக்கு காசோலை​யும், 03 ஐபோன்​களும் கொடுத்​தார். அந்த காசோலையில் பணம் இல்லை என்​று குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன், செல்​போன்​களை மீண்​டும் தானே வீட்​டுக்கு வந்து பிடுங்கி சென்று விட்​ட​தாக​வும் பாதிக்​கப்​பட்​ட​வர்​கள் கூறுயுள்ளனர். இதன் காரண​மாக 'கோல்டு மேன்' சூரிய ​பாபு மீது நா​ராயண கூடா போலீ​ஸார் வழக்கு பதிவு செய்​து வி​சா​ரணை நடத்​தவுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Gold Man Suriyababu accused of cheating many people by buying and selling gold at low prices


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->