வெனிசுலாவை நிலைகுலைய வைத்துள்ள நிலநடுக்கம்; இந்தியா​வின் கச்சா எண்ணெய் வர்த்தகத்​தில் பெரும் பாதிப்பு ஏற்படும் அபாயம்..! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்க நாடான வெனிசுலா​வில் அடுத்​தடுத்த ஏற்பட்ட நிலநடுக்​கங்​கள் அந்நாட்டை நிலைகுலைய வைத்துள்ளது. இந்நிலையில், இந்த நிலா நடுக்கங்கள் காரணமாக அந்​நாட்​டுடன் வேகமாக வளர்ந்து வரும் இந்​தி​யா​வின் கச்சா எண்ணெய் வர்த்தகத்​தில் புதிய கவலைகளை ஏற்​படுத்​தி​யுள்​ளன.

அதாவது, சுமார் 14,000 கிலோமீட்​டர் தொலை​வில் உள்ள இந்​தி​யா​வில் அதன் தாக்​கம் எதிரொலிக்​கக்​கூடும் என்று எட்மி இன்​சூரன்ஸ் புரோக்​கர்ஸ் நிறு​வனத்​தின் மறுகாப்​பீடு மற்​றும் உலகளா​விய இயற்கை வளங்​கள் பிரி​வின் நிர்​வாக இயக்​குநர் குணால் கன்னா எச்சரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியுள்ளதாவது;

மிகக் குறுகிய காலத்​தில் இந்​திய சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களுக்கு கச்சா எண்ணெய் வழங்​கும் முக்​கிய நாடாக வெனிசுலா உருவெடுத்துள்ளது. எனவே, அந்​நாட்​டின் ஏற்​றுமதி உள்​கட்​டமைப்​பில் ஏற்​படும் எந்தவொரு பாதிப்​பும் சர்​வ​தேச எல்​லைகளைத் தாண்டி இந்தியாவிலும் தாக்​கத்தை ஏற்​படுத்​தும் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்த நிலநடுக்​கத்​தால் எண்ணெய் சுத்​தி​கரிப்பு நிலை​யங்​களுக்கு நேரடிப் பாதிப்பு ஏற்படா​விட்​டாலும், மின் தடை, போக்​கு​வரத்​துச் துண்​டிப்பு மற்றும் துறை​முகக் கட்​டுப்​பாடு​கள் காரண​மாக கச்சா எண்ணெய் ஏற்​றுமதி பல நாட்​களுக்​குத் தாமதமாகும் அபாயம் ஏற்படும் என எச்சரித்துள்ளார்.

அடுத்தடுத்த நிலநடுக்கங்கள் காரணமாக வெனிசுலா​வின் முக்​கிய சரக்கு போக்​கு​வரத்து நுழை​வாயி​லான 'லா குவை​ரா' துறை​முகப் பகு​தி​யில் அவசரநிலை பிரகடனப்​படுத்​தப்​பட்​டுள்​ளது. இதனால், கப்​பல் கட்​ட​ணங்​கள், தாமதக் கட்டணங்​கள் மற்​றும் கடல்​சார் காப்​பீட்டு பிரீமி​யம் ஆகியவை கணிச​மாக உயர வாய்ப்​புள்​ளன.

வெனிசுலாவில் இது​வரை அரசி​யல் பதற்​றங்​கள் மற்​றும் பொருளா​தா​ரத் தடைகள் சார்ந்த அபா​யங்​களை மட்​டுமே கணக்​கில் கொண்டு, காப்​பீட்​டுக் கட்​ட​ணங்​கள் நிர்​ண​யிக்​கப்​பட்டன. இனி இயற்கை பேரிடர் அபா​யங்​களை​யும் காப்பீட்​டுத் துறை கணக்​கில் எடுத்​துக்​கொள்ள வேண்​டிய கட்டாயம் எழுந்​துள்​ளது.

இதனால், இந்​தி​யா​வுக்​கான கச்சா எண்​ணெய் விநியோகத்​தில் சிக்​கல் ஏற்​படும் அபா​யம் ஏற்​பட்​டுள்​ளதாக குணால் கண்ணா குறிப்பிட்டுள்ளார்

முன்னதாக இந்த மாத தொடக்​கத்​தில், பிரதமர் நரேந்​திர மோடி, வெனிசுலா​வின் தற்​காலிக அதிபர் டெல்சி ரோட்​ரிக்​ஸுடன் உயர்​மட்​டப் பேச்​சு​வார்த்தை நடத்​தி​னார். அப்போது கச்சா எண்​ணெய் தவிர சுரங்​கம், மருந்​துப் பொருட்​கள், ஆட்​டோமொபைல் துறை​களில் இந்​திய நிறு​வனங்​கள் முதலீடு செய்​வது குறித்​தும் ஆலோ​சிக்​கப்​பட்​டது. 

ஆனால், தற்​போதைய நிலநடுக்கச் சூழல் இந்​தத் திட்​டங்​களில் புதிய மறு​பரிசீலனையையோ அல்​லது கால​தாமதத்​தை ஏற்படுத்த கூடும் என கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Indias crude oil trade at risk of major impact due to Venezuela earthquake


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->