'கூட்டணி இல்லைனா திமுகவுக்கு கஷ்டம் தான்'...! - தமிழ்நாட்டு அரசியலில் அணுகுண்டை வீசிய திருமாவளவன்...!
If there no alliance it difficult DMK Thirumavalavan who dropped atomic bomb Tamil Nadu politics
தி.மு.க. கூட்டணி அரசியலை முற்றிலுமாக கைவிட்டு, இனி அனைத்து தேர்தல்களிலும் தனித்துப் போட்டியிட வேண்டும் என்ற ஆ.ராசாவின் கருத்து தமிழக அரசியல் அரங்கில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ள நிலையில், அதற்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் முக்கிய பதிலளித்துள்ளார்.
திருவாரூரில் நடைபெற்ற தி.மு.க. பிரமுகர் இல்லத் திருமண விழாவில் பேசிய தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா, கட்சியின் கொள்கை, அடையாளம் மற்றும் அரசியல் வலிமையை பாதுகாக்க வேண்டுமெனில், இனிமேல் கூட்டணி என்ற பேச்சுக்கே இடமளிக்கக் கூடாது என வலியுறுத்தியிருந்தார்.

இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டு வரும் நிலையில், டெல்லியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன்-ிடம் நிருபர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர்.
அதற்கு பதிலளித்து அவர் தெரிவித்திருப்பதாவது,"கூட்டணி இல்லாமல் தி.மு.க. மீண்டும் ஆட்சியை கைப்பற்ற முடியும் என உறுதியாக கூற முடியுமா என்பது மிகப்பெரிய கேள்வியாக உள்ளது.
தி.மு.க. தனித்துப் போட்டியிடுவது என்பது அந்தக் கட்சியின் உள்கட்சி முடிவு. அந்த விவகாரத்தில் இறுதி முடிவை எடுப்பது அவர்களது உரிமை.ஆனால் கடந்த தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது, கூட்டணி கட்சிகளின் வாக்கு வலிமை மற்றும் ஆதரவு தி.மு.க. வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ளது என்பதைக் மறுக்க முடியாது.
பல தொகுதிகளில் கூட்டணி கட்சிகளின் ஒத்துழைப்பே வெற்றியை தீர்மானித்த முக்கிய காரணிகளில் ஒன்றாக இருந்தது.அதனால், கூட்டணி இல்லாமல் எதிர்கால தேர்தல்களில் ஆட்சியை பிடிப்பதும், ஆட்சியை நிலைநிறுத்துவதும் சவாலான ஒன்றாகவே இருக்கும்” என தெரிவித்துள்ளார்.
English Summary
If there no alliance it difficult DMK Thirumavalavan who dropped atomic bomb Tamil Nadu politics