முன்னாள் முதலமைச்சர் ஸ்டாலினைச் சந்தித்த வைரமுத்து...! - ஞானபீட விருது விழா அழைப்பிதழ் வழங்கி அழைப்பு...! - Seithipunal
Seithipunal


கவிப்பேரரசு வைரமுத்துவின் பிறந்தநாளான ஜூலை 13-ஆம் தேதி டெல்லியில் நடைபெறவுள்ள சிறப்பு விழாவில், இந்திய இலக்கிய உலகின் உயரிய அங்கீகாரமான ஞானபீட விருது அவருக்கு வழங்கப்பட உள்ளது.முன்னாள் மத்திய அமைச்சரும், புகழ்பெற்ற தத்துவஞானியுமான டாக்டர் கரண் சிங், வைரமுத்துவுக்கு இந்த பெருமைமிகு விருதை வழங்குகிறார்.

விருதைப் பெற்றுக்கொண்ட பின் கவிஞர் வைரமுத்து ஏற்புரையும் ஆற்ற உள்ளார்.இந்த விழாவிற்கான அழைப்பிதழை, திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான மு.க. ஸ்டாலினை நேரில் சந்தித்து வைரமுத்து வழங்கினார்.

இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பதிவில் வைரமுத்து தெரிவித்திருப்பதாவது,"இந்திய இலக்கியத்திற்காக வழங்கப்படும் உச்சபட்ச அங்கீகாரமான ஞானபீட விருது, 25 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் தமிழுக்கு கிடைத்திருப்பது பெருமையும் பெருவிழாவும் ஆகும்.

எனது பிறந்தநாளான ஜூலை 13-ஆம் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் ஞானபீட விருது எனக்கு வழங்கப்பட உள்ளது.காஷ்மீர் அரச குடும்ப மரபைச் சேர்ந்தவரும், முன்னாள் மத்திய அமைச்சரும், இந்தியாவின் சிறந்த தத்துவ ஞானியுமான டாக்டர் கரண் சிங் இந்த விருதை வழங்குகிறார்.

அந்த அங்கீகாரத்தை பெற்றுக்கொண்டு ஏற்புரை ஆற்ற உள்ளேன்.அந்த விழாவிற்கான அழைப்பிதழை திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் முதல்-அமைச்சருமான தளபதி மு.க. ஸ்டாலினுக்கு வழங்கினேன். அவர் மகிழ்ச்சியுடன் வாழ்த்துகளை தெரிவித்தார்” என பதிவிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Vairamuthu met former Chief Minister Stalin Invitation Jnanpith Award ceremony issued


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->