'என்​எல்​சி​யின் 3 சதவீத பங்​கு​களை விற்​பனை செய்யும் மத்​திய அரசின் முடிவை திரும்பப் பெற வேண்டும்': சிபிஎம் மற்றும் தவாக வலியுறுத்தல்..! - Seithipunal
Seithipunal


என்​எல்​சி​யின் 3 சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இந்த முடிவை மத்​திய அரசு உடனடியாக மறு​பரிசீலனை செய்​ய​வேண்​டும் என்றும், இல்​லை​யென்றால், இதை எதிர்த்து தவாக கட்சி மற்றும் மார்க்​சிஸ்ட் கட்சி போராட்டத்தில் குதிக்கும் என மார்க்​சிஸ்ட் மாநிலச் செய​லா​ளர் பெ.சண்​முகம், தவாக தலை​வர் தி.வேல்​முரு​கன் ஆகியோர் எச்சரிக்கை விருத்துள்ளனர்.

இது தொடர்​பாக அவர்​கள் வெளி​யிட்ட அறிக்​கை​களில் கூறியுள்ளதாவது;

பெ.சண்​முகம் மார்க்​சிஸ்ட் : 

''தமிழகத்​தின் மின்​சா​ரத் தேவையை பூர்த்தி செய்​தல், வேலை​வாய்ப்​பு​களை உரு​வாக்​குதல் மற்​றும் மாநில பொருளா​தார கட்​டமைப்பு வளர்ச்​சிக்கு முக்​கிய பங்​காற்​று​தல் என நெய்​வேலி பழுப்பு நிலக்​கரி நிறு​வனம் (என்​எல்​சி) நிகழாண்​டில் ரூ.3,670 கோடி லாபத்தை ஈட்​டி​யுள்​ளது.

இந்​நிலை​யில் இந்​நிறு​வனத்​தின் மூன்று சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இது பொதுத்​துறை நிறு​வனங்​களை சீரழிக்​கும் செய​லாகும்.

நாட்​டில் லாபம் ஈட்​டிவரும் நவரத்​தின பொதுத்​துறை நிறு​வனங்​களை தேசிய பணமய​மாக்​கல் திட்​டம் என்ற பெயரில் தனி​யாருக்கு தாரை வார்த்து வரு​வதன் தொடர்ச்​சி​யே, என்​எல்சி நிறு​வனத்​தின் பங்​கு​களை​யும் விற்க முடிவு செய்​திருப்​ப​தாகும். என்எல்சியின் பங்கு விற்​பனை செய்​யும் முடிவை மத்​திய அரசு உடனடி​யாகத் திரும்​பப்​பெற வேண்​டும்'' என குறிப்பிட்டுள்ளார்.

தி.வேல்​முரு​கன் தமிழக வாழ்வுரிமை கட்சி;

''நெய்​வேலி​யில் கடந்த 50 ஆண்​டு​களாக லாபத்​தில் இயங்​கிவரும் என்​எல்சி நிறு​வனம், தமிழகத்​தில் இருந்து கிடைக்​கும் லாபத்தை கடந்த 2002-ல் 49 சதவீதம், 2006-ல் 10 சதவீதம், 2013-ல் 5 சதவீதம் என விற்​பனை செய்ய முயற்​சித்​தது. ஆனால் அரசி​யல் இயக்​கங்​கள் ஒன்​றிணைந்து குரல் கொடுத்​ததன் விளை​வாக அந்த முயற்​சிகள் தடுக்​கப்​பட்​டன.

3 சதவீத பங்​கு​கள்

இந்​நிலை​யில் என்​எல்​சி​யின் 3 சதவீத பங்​கு​களை விற்​பனை செய்ய மத்​திய அரசு முடிவு செய்​துள்​ளது. இந்த முடிவை மத்​திய அரசு மறு​பரிசீலனை செய்​ய​வேண்​டும். இல்​லை​யெனில், இதை எதிர்த்து தவாக கட்சி போ​ராட்​டத்​தில் குதிக்​கும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

CPM and Dawaka insist that the central government's decision to sell NLC shares should be withdraw


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->