இயற்கையை பாதுகாக்க துடிக்கும் 73 வயது தேவதை; கோவையில் தனது ஓய்வூதியத் பணத்தில் 14 ஆண்டுகளாக துணிப்பைகளை இலவசமாக வழங்கி விழிப்புணர்வு ..!
An elderly woman raises awareness by distributing free cloth bags in Coimbatore
பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டினால் நிலம் மற்றும் நீர்நிலைகள் உள்ளிட்ட சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கின்றன. இதைத்தடுக்க தமிழக அரசால் ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தடை விதித்துள்ளது. பாலித்தீன் கவர்களுக்கு மாற்றாக துணி, மஞ்சப் பைகளை பயன்படுத்த அறிவுறுத்தியுள்ளது.
அரசின் இந்த விழிப்புணர்வு நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில், கோவை வடவள்ளியைச் சேர்ந்த கி.புஷ்பவல்லி (73) ஓய்வுபெற்ற பெண் அரசு ஊழியரான இவர், பிளாஸ்டிக் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பணியை கடந்த 14 ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறார்.
அதன்படி, நேற்று கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பொதுமக்களுக்கு துணிப் பைகளை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

இது தொடர்பாக அவர் பெரும் போது கூறியதாவது;
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தில் கணக்கு அலுவலராக தான் பணியாற்றி கடந்த 2011-இல் ஓய்வு பெற்றதாகவும், குடிநீரின் தேவை, நீர்நிலைகளை பாதுகாப்பது, நிலத்தடி நீர்மட்டம் உயர்வதன் அவசியம் ஆகியவற்றை அறிந்ததால், கடந்த 2013-ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், பள்ளிகள், கல்லூரிகள், சுதந்திர தினவிழா, குடியரசு தின விழா, மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் பொருட்களின் பாதிப்பு குறித்து நோட்டீஸ் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது ஒவ்வொருவருக்கும் ரூ.20 மதிப்புள்ள ஒரு துணிப் பையை இலவசமாக விநியோகித்து வருவதாகவும், கடந்த 14 ஆண்டுகளில் 12 ஆயிரம் துணிப் பைகளை வழங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அவர், பிரபல துணி நிறுவனத்திலிருந்து துணியை சலுகை விலையில் வாங்கி, தானே வீட்டில் அமர்ந்து பையாக தைத்து பொதுமக்களுக்கு வழங்குவதக்கவும் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தனது ஓய்வூதியத் தொகைகளை பயன்படுத்தி இப்பணிகளை மேற்கொள்கிறதாகவும், மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
An elderly woman raises awareness by distributing free cloth bags in Coimbatore