66 அடி உயரம் 60 அடி அகலத்தில் முதல்வர் விஜய்யின் ஓவியம்; அழிந்துவரும் ஓவியக் கலையை பாதுகாக்க நூதன முறையில் கோரிக்கை..!
Painting students draw a 66 foot high and 60 foot wide portrait of CM Vijay
நேற்று நாட்டின் 80 வது சுதந்திர தினம் நாடும் முழுவதும் கோலாகலமாக நடைபெற்றது. இந்த சுதந்திர தினத்தையொட்டி கன்னியாகுமரி மாவட்டத்தில் ஓவியப் பயிற்சி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து தமிழக முதல்வர் விஜய்யின் 66 அடி உயர விழிப்புணர்வு ஓவியத்தை 5 மணி நேரத்தில் வரைந்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் மற்ற பாடங்களை போல் ஓவியப் பாடமும் உள்ளது. 02 பிரிவுகளில் நடைபெற்ற இந்த பாடத்திட்டம் கடந்த 2017-ஆம் ஆண்டு முதல் பள்ளிகளில் நிறுத்தப்பட்டது.
எனவே, இதை தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று, பள்ளிகளில் மீண்டும் ஓவிய ஆசிரியர் நியமித்து ஓவியம் பயின்றவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும் என்றும், அழிந்துவரும் ஓவியக் கலையை பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தும் வகையில் இந்த ஓவியம் வரையப்பட்டுள்ளது.

அதற்காக தமிழக முதல்வர் விஜய்யின் அலுவலக மாதிரி படத்தை குமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே மாமூட்டுகடை ஆர்.பி.ஏ பள்ளி மைதானத்தில் ஓவியம் வரைந்துள்ளனர்.
இங்குள்ள ஓவிய பயிற்சி மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியர்கள் இணைந்து, 66 அடி உயரம் 60 அடி அகலத்தில் ஓவியம் வரைந்து ஓவிய கலை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். இதில் 139 ஓவிய மாணவ, மாணவிகள் மற்றும் 10 ஆசிரியர்கள் சேர்ந்து ஐந்து மணி நேரத்தில் இந்த ஓவியத்தை வரைந்துள்ளனர். அச்சு அசலாகஇருக்கும் முதல்வரின் ஓவியத்தை பார்த்த ஏராளமானோர் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.
English Summary
Painting students draw a 66 foot high and 60 foot wide portrait of CM Vijay