இயக்குநர் கே.பாக்யராஜ் உடல் நாளை பெசன்ட் நகரில் அரசு மரியாதையுடன் தகனம்...!
Director K Bhagyaraj body cremated state honors Besant Nagar tomorrow
தமிழ் திரையுலகின் தனித்துவமான படைப்பாளரும் பன்முக திறமையாளருமான நடிகர்-இயக்குநர் கே. பாக்யராஜ் (73) மாரடைப்பு காரணமாக இன்று காலமானார்.
அவரது மறைவு திரையுலகினரையும் ரசிகர்களையும் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பாக்யராஜ், தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

திரைக்கதை ஆசிரியர், இயக்குநர், நடிகர், இசையமைப்பாளர் என பல்வேறு துறைகளில் தனக்கென அழியாத முத்திரை பதித்திருந்த பாக்யராஜின் மறைவு, தமிழ் திரையுலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாக பார்க்கப்படுகிறது.
அவரது மறைவு செய்தி வெளியாகியதையடுத்து, திரைபிரபலங்கள், அரசியல் தலைவர்கள், ரசிகர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் பாக்யராஜின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு திரையுலகினர், அரசியல் பிரமுகர்கள் மற்றும் ஏராளமான ரசிகர்கள் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், மறைந்த பாக்யராஜின் இறுதிப் பயணம் அரசு மரியாதையுடன் நடைபெறும் என முதலமைச்சர் விஜய் அறிவித்துள்ளார்.மேலும், பாக்யராஜின் உடல் நாளை மதியம் 1.30 மணியளவில் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் முழு மரியாதையுடன் தகனம் செய்யப்பட உள்ளது.
English Summary
Director K Bhagyaraj body cremated state honors Besant Nagar tomorrow