கனவெல்லாம் கலைந்துபோன கொடூரம்...! திருமணமான ஒரே மாதத்தில் மலை உச்சியில் இருந்து விழுந்து புதுப்பெண் பரிதாப பலி...! - Seithipunal
Seithipunal


திருமணமாகி ஒரு மாதமே ஆன நிலையில், கோவில் தரிசனத்திற்குச் சென்ற புதுமணப்பெண் குரங்குகளால் ஏற்பட்ட பதற்றத்தில் மலை உச்சியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே தெற்கு திட்டங்குளத்தைச் சேர்ந்தவர் அனிதா (24). இவருக்கும் ஓட்டப்பிடாரம் அருகே ஓசனூரைச் சேர்ந்த சுரேஷுக்கும் கடந்த மாதம் திருமணம் நடைபெற்றது.புதுமணத் தம்பதிகளான இருவரும் நேற்று மாலை கோவில்பட்டி அருகே அமைந்துள்ள பிரசித்தி பெற்ற கழுகுமலை கழுகாசலமூர்த்தி கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்றிருந்தனர்.

கோவிலில் வழிபாடு முடித்த பின்னர், மலை உச்சியில் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கும் இருவரும் ஏறிச் சென்றனர்.அப்போது மலையெங்கும் ஏராளமான குரங்குகள் சுற்றித்திரிந்த நிலையில், தங்களிடம் இருந்த பழங்களை குரங்குகளுக்கு கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக திடீரென பல குரங்குகள் ஒரே நேரத்தில் தம்பதியரை சூழ்ந்தன. எதிர்பாராத இந்த சூழ்நிலையால் கடும் அச்சமடைந்த அனிதா நிலைதடுமாறி மலை உச்சியில் இருந்து கீழே தவறி விழுந்தார்.

இந்த கோர விபத்தில் அனிதா தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.இதுகுறித்து தகவல் அறிந்த காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, உயிரிழந்த அனிதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.திருமணமாகி ஒரே மாதத்தில் புதுமணப்பெண் உயிரிழந்த இந்த சோக சம்பவம், குடும்பத்தினரையும் அப்பகுதி மக்களையும் கடும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

horror that shattered all dreams newlywed falls from mountaintop and dies pitiful death just month after her wedding


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->