'எங்கள் இதயத்தில் நீங்கா இடம் பெற்றவர்'...! - பாக்கியராஜ் மறைவால் கலங்கிய எடப்பாடி பழனிசாமி...!
He special place our hearts Edappadi Palaniswami distraught over demise Bhagyaraj
அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, திரையுலகின் பன்முகச் சிகரமான கே. பாக்யராஜ் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து உருக்கமான பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதள பதிவில் அவர் தெரிவித்திருப்பதாவது,"பிரபல திரைப்பட இயக்குநர், சிறந்த திரைக்கதை ஆசிரியர், திறமையான நடிகர், இசையமைப்பாளர் என பன்முக திறமைகளால் தமிழ் திரையுலகில் தனித்துவமான இடத்தைப் பெற்றிருந்த கே. பாக்யராஜ் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் ஆழ்ந்த மனவேதனையும் அடைந்தேன்.

தனக்கென தனி பாணியில் கதை சொல்லும் திறன், இயல்பான நடிப்பு, நகைச்சுவை கலந்த திரைக்கதை அமைப்பு ஆகியவற்றால் ரசிகர்களின் மனதில் அழியாத முத்திரையை பதித்தவர் பாக்யராஜ்.மாண்புமிகு புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்கள்மீது பேரன்பும் பெருமதிப்பும் கொண்டிருந்தவர்.
‘அண்ணா நீ என் தெய்வம்’ திரைப்படத்தின் முடிவுறாத காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு, அதற்கேற்ற புதிய திரைக்கதையை வடிவமைத்து ‘அவசர காவலர்கள் 100’ திரைப்படமாக உருவாக்கி அதனை வெற்றிப்படமாகவும் மாற்றினார்.அதேபோல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும் பாக்யராஜ் மீது தனித்துவமான அன்பும் நம்பிக்கையும் வைத்திருந்தார்.
இந்திய திரையுலகில் தன்னிகரற்ற திரைக்கதை ஆசிரியர் என்ற பெருமைக்குரிய அவரது மறைவு, கலை உலகிற்கு ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்.அவரை இழந்து துயரத்தில் வாடும் குடும்பத்தினர், திரைத்துறையினர் மற்றும் கோடிக்கணக்கான ரசிகர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மறைந்த அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் சாந்தியுடன் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்” எனது தெரிவித்தார்.
English Summary
He special place our hearts Edappadi Palaniswami distraught over demise Bhagyaraj