'எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்'; கே.பாக்யராஜ் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது; அண்ணாமலை இரங்கல்..! - Seithipunal
Seithipunal


தமிழ் திரையுலகின் ஜாம்பவான் இயக்குநர் மற்றும் பிரபல நடிகருமான கே.பாக்யராஜ் தனது 73 வயதில் காலமாயுள்ளர். உடல்நிலை மோசமான நிலையில் சென்னையில் உள்ள கிரீம்ஸ் அப்பலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவருக்கு, திடீர் மாரடைப்பு ஏற்பட்டு, உயிரிழந்துள்ளார்.

அவரது மறைவுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இயக்குநர் கே.பாக்யராஜ் மறைவுக்கு முன்னாள் தமிழக பாஜக தலைவரும், தற்போது 'வீ த லீடர்ஸ்' அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலை இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;

''சிறந்த இயக்குநரும், நடிகரும், இந்திய அளவில் மிகச்சிறந்த திரைக்கதையாசிரியர்களில் ஒருவருமான, கே.பாக்யராஜ், உடல்நலக்குறைவால் காலமான செய்தி, மிகுந்த அதிர்ச்சியும், வருத்தமும் அளிக்கிறது.

தன்னுடைய திரைப்படங்கள் மூலம், தமிழக மக்களின் பேரன்பைப் பெற்றிருந்தவர். எளிய, பண்பான மனிதராகத் திகழ்ந்தவர்.

அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!'' என்று பதிவிட்டு இரங்கல் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Annamalai condoles the news of K. Bhagyarai passing away saying it is saddening


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->