திட்டமிட்ட நாடகமா...? மனு நிராகரிக்கப்பட்ட தவெக வேட்பாளர் திடீரென எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைப்பு...! - Seithipunal
Seithipunal


2026 சட்டமன்ற தேர்தலின்போது எடப்பாடி தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டு, பின்னர் வேட்புமனு நிராகரிக்கப்பட்ட அருண்குமார், சில மாதங்களிலேயே மீண்டும் அதிமுக பக்கம் திரும்பியுள்ளார். இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்த அவர், அவரது முன்னிலையில் அதிமுகவில் இணைந்து அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளார்.கடந்த சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட அருண்குமார் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.

ஆனால், தேர்தல் அதிகாரிகளின் வேட்புமனு பரிசீலனையின்போது, அவரது மனுவும், மாற்று வேட்பாளராக அவரது மனைவி தாக்கல் செய்த மனுவும் நிராகரிக்கப்பட்டன.தேவையான ஆவணங்கள் முறையாக இணைக்கப்படாதது உள்ளிட்ட காரணங்களால் இரு மனுக்களும் ஏற்கப்படவில்லை.

வேட்புமனு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து அருண்குமார் திடீரென காணாமல் போன சம்பவம் அப்போது சேலம் மாவட்ட அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.தேர்தல் முடிவடைந்து சில மாதங்கள் கடந்துள்ள நிலையில், அருண்குமார் இன்று எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்தார்.

அப்போது மீண்டும் அதிமுகவில் இணைந்து கட்சிப் பணியாற்ற தனது விருப்பத்தை தெரிவித்ததாக கூறப்படுகிறது.இதையடுத்து எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவர் அதிமுகவில் இணைந்தார். ஏற்கனவே அதிமுகவில் நிர்வாகியாக இருந்த அருண்குமார், தற்போது மீண்டும் அக்கட்சிக்கே திரும்பியிருப்பது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

அருண்குமாரின் இந்த திடீர் அரசியல் நகர்வு தவெக நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தேர்தல் நேரத்திலேயே திட்டமிட்டு செயல்பட்டு, தனது வேட்புமனு நிராகரிக்கப்படும் வகையில் அவர் செயல்பட்டதாக தவெக தரப்பினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தற்போது அருண்குமார் மீண்டும் அதிமுகவில் இணைந்திருப்பது, தங்களது சந்தேகங்களுக்கு வலுசேர்ப்பதாக தவெக நிர்வாகிகள் தெரிவித்து வருகின்றனர். இதனால் சேலம் மாவட்ட அரசியல் களம் மீண்டும் சூடுபிடித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Is it planned drama Tvk candidate whose petition rejected suddenly joins AIADMK presence Edappadi Palaniswami


கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

சட்டப்பேரவையில் ஆக்கப்பூர்வமாக செயல்படும் எதிர்க்கட்சி எது?




Seithipunal
--> -->